குய்யோ முறையோவென்று கத்துதல்; கூச்சலிடு தல்
குய்யோ முறையோ வென்று கூவிப் புலம்புதல் (பஞ்ச வனவாசம் 2)
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குழியில் விழுதல்
குருதிகொழித் திழிந்து குமிழ்த்து எறிய (பெரியாழ்)
குலங் கோத்திரம் பேசல்
குலத்திற்குன்றாக் கொழுங்கொடிச் செல்வர் (சிலப்)
குலந்தவங் கல்வி குடிமை (நாலடி 333)
குலம் கோத்திரம் விசாரித்தல்
குலமும் குடியும் தழைத்து வளரப் பாடுபடல்
குலமும் குடியும் நல்லவர்
குலமும் குணமும் ஒத்த காதலர்
குலமும் குணமும் நலமும் உடையார்
குலமும் குணமும் பொருந்தியவர்
குலுக்கி உலுக்கு குலுக்கி மினுக்கித் தளுக்கி நடப்பவள்
குலை குலைந்து நடுநடுங்கல்
குழந்தை குட்டிகளின் கும்மாளம்
குழப்பமும் கலகமும் விளைவித்தல்
குழப்பமும் கலவரமும் விளைத்தல்
குழப்பமும் குளறுபறுபடியும் இல்லாமல்
குழப்பமும் கொந்தளிப்பும் நிலவுதல்
குழலினும் கனிந்த அம் தீங்கு தலை (நைட 944)
குழலும் யாழும் அமிழ்துங் குழைத்த மழலைக்கிளவி (சிலப் 2-59)
குழலை யாழினை அமுதினைக் குழைத்தன குதலை மழலை (சிவராத்பு 5-58)
குழிந்தாழ்ந்த கண் (நாலடி 49)
குழைந்து இழைந்து பேசுதல்