குழைந்து உருகி நைந்து வருந்துதல் (சிந் 1406)
குழைந்து நயமாகப் பேசுதல் (கல்கி)
குழைவும் நெளிவும்
குளம் குட்டையில் விழுந்து உயிர்விடுதல்
குளறித் தடுமாறிப் பேசுதல்
குளித்து முழுகி வருதல்
குளிர்ந்து சில்லிட்டுப் போதல்
குற்றங்களைந்து குறைபெய்து வாசித்தல்
குற்றங் குறைகளைப் பாராட்டா திருத்தல்
குற்றங் குறைபாடுகளைப் பொருட்படுத்தாதிருத்தல்
குற்றஞ் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்று (மனுமுறை)
குற்ற நற்றங்களைக் கூறுதல் (திவ் 378)
குற்ற நற்றம் பார்க்கக்கூடாது
குற்றம் பொறுத்துக் குறை நீக்கியருள்க!
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடத்தல் (கல்கி)
குறுக்கி நெருக்கிச் சுருக்குதல்
குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருத்தல்
குறுக்கும் மறுக்கும் நடத்தல்
குறுகிச் சிறுகி அழிதல்
குறுகிச் சிறுத்துப் போயிருத்தல்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் மயக்குறு மக்கள்
குறும்பு சேட்டை செய்தல்
குறும்பும் கேலியும் கிண்டலும் (செலவைக்) குறைத்துச் சுருக்கிக் கொள்ளல்
குறைந்து மறைந்து போதல்
குறை நிறைகளைக் கண்டாராய்தல்