உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68

குறையை நிறைவு செய்தல்

குறையை முறையிடல்

குறைவாழ்வும் குற்றுயிருமாய்த் தவிக்கும் ஏழைகள்

குன்றாதும் குறையாதும் இருக்கும் செல்வம்

குன்றிக் குறைந்து அழிதல்

குன்றிற் பிறந்துதாது அளைந்து குளிர் தூங்கு அருவி தோய்ந்து வரும் தென்றல் (நைட 369)

குன்று துன்றின எனக் குமுறுகோப மதமா (கம்ப 3-1-10)

குன்று நெகிழ்ப்பன்ன குளிர் கொள் வாடை (அகம் 163)

குன்றென உயரிய குவவுத் தோளினான் (கம்ப 1-4-11)

கூகையின் குழறலும் ஆந்தையின் அலறலும் கேட்டார்க்கு அச்சம் விளைக்கும்

கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்தல்

கூச்சலும் கும்மாளமும் போடுதல்

கூச்சலும் குழப்பமும் விளைவித்தல்

கூட்ட நாட்டம் இப்போது நடப்பதில்லை

கூட்டமும் கும்பலும் (கூடாது)

கூட்டிக் குவித்துவைத்த குப்பை

கூட்டியும் குறைத்தும் புனைத்தும் திரித்து எழுதுதல்

கூடக்குத் தகையாக - மொத்தமாக

கூடக் குறைய இருந்தால்

கூறு கூடப் பிறந்த தங்கை

கூட மாட வேலை செய்

கூடி ஆடி விழாச் செய்து (பெரியாழ்)

கூடிக் கலந்து செயலாற்றுதல்

கூடிக் குதித்துக் கும்மாளமிடுதல்; மகிழ்தல்

கூடிக் குலவிக் கும்மாளமடித்தல் ; உறவாடுதல்

கூடிக் குலாவி மகிழ்தல்

கூடிப் பாடி ஆடி மகிழ்தல்