உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கேளும் கிளையும் கெட்டோர்க்கில்லை (நறுந்தொகை 48)

கேவிக்கேவி அழுதல்

கைகட்டி வாய்புதைத்து நிற்றல்

கைகட்டி வாய் பொத்தி நிற்றல்

கைகூப்பிக் கும்பிடல்

கைச்சுத்தமும் வாய்ச்சுத்தமும் உடையவன் - திருடா

தவன், பொய் பேசாதவன்

கைதூக்கிக் கரை சேர்த்தல் (கல்கி)

கை நீட்டி ஏந்துதல்

கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கை (பெரும்

பாண் 40)

கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு (முருகாற் 17)

கையில் ஒருகாசுமில்லை கடன் கொடுப்பார் ஆருமில்லை

கையுங் களவுமாகத் திருடனைப் பிடித்தல்

கையுங் காலும் சும்மாயிராதவன்

கையும் மெய்யுமாகப் பிடித்தல்

கையெழுத்துக் கால் எழுத்து இல்லாத கடிதம் (கல்கி)

கொக்கு குருவியெல்லாம் போய்விட்ட குளம்

கொங்கு விம்முறு குவிமுகை முல்லை (பாகவதபு 10-9-12)

கொஞ்ச நஞ்சமல்ல

கொஞ்சிக் குதூகலித்தல்

கொஞ்சிக் குலாவிப் பேசுதல் ; மகிழ்தல்; இன்புறல்;

குதூகலித்தல் (வைண 2-3)

கொஞ்சிக் குழைந்து பேசுதல்

கொஞ்சிக் கெஞ்சி வஞ்சஞ் செய்யும் பொது மாதர்

கொஞ்சுமொழிக் கிஞ்சுகவாய் அஞ்சுகம் (அருண

தோத். ம. 69)

கொட்டி முழக்கி விழாக் கொண்டாடல்

கொட்டு குழல் இல்லாமல் சடங்கு நடத்துதல்