பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

கொட்டும் மழையையும் வெட்டும் குளிரையும் பொருட்

படுத்தாமல்

கொட்டு முழக்குடன் திருமணம் நடத்துதல்

கொடுக்கல், வாங்கல் சம்பந்தம் வைத்துக்கொள்ளல்

கொடு கொடென்று குளிரால் நடு நடுங்குதல்

கொடுத்த கட்டளையைக் குறைவற நிறைவேற்றல்

கொடுப்போரும் அடுப்போரும் இன்றித் தாமே எதிர்ப்

பட்டு மணம் செய்து கொள்ளல்

கொடைக் கடன் பூண்ட தாழிருந்தடக்கைக் கொற்ற

வன் (காசிகண் 43-23)

கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினன் (பதிற் 20)

கொண்டல் சேர் கோபுரம்

கொண்டான் கொடுத்தான் இடத்தில் வெகுநாள்

தங்காதே

கொண்டு கொடுத்து வாழ்

கொத்தடிமை குடியடிமை

கொத்தடிமை குலவடிமையாய் வாழ்தல்

கொத்திக் குதறிவைத்த காய்

கொத்துங் குறையுமாய்க் கிடத்தல் - அரைகுறையாய்க்

கிடத்தல்

கொத்தோடே குலையோடே கொண்டு போதல்

கொப்புங் குழையுமாய்த் தழைத்த மரம்

கொல்லு கொலைக் கஞ்சாத கொடும்பாவி

கொலை கொள்ளை செய்யும் கொடியோர்

கொலை கொள்ளை திருட்டு

கொலையும் களவும் புலையுந் தவிர்

கொலையும் கொள்ளையும் மலிந்த நாடு

கொவ்வைச் செவ்வாய் அமுதுகுமென்கு தலைத் தீஞ்

சொல் மகவு (பாகவதபு 10-34-2)