பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கொழுகொம்பில்லாக் கொடிபோல் மெலிதல்; குழைந்து

போதல்

கொழுகொம்பு இல்லாத கொடி போல் ஆதல்

கொழுகொழு மொழுமொழு என்று வளர்ந்தவன்(ள்)

கொழுத்தும் பருத்தும் போன உடல்

கொழுமையும் வளமும் கெழுமிய

கொள்கை கோட்பாடுகள் (அண்ணா)

கொள்கையோ குறிக்கோளோ இல்லாத(வன்)

கொள்வனை கொடுப்பனை அவர்களிடமில்லை

கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும் உள்ளன

கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக

கொற்றவெண் குடை எனக் குளிர்வெண் திங்கள் (கம்ப

(5-2-52)

கொன்று குவித்தல்

கோக்குமாக்குச் செய்தல் - புரட்டுச் செய்தல்

கோட்டை கொத்தளங்கள்

கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த

தென் நீர் ஓடை (வில்லி 43-17)

கோணல் மாணல் - திருக்கு; வளைவு

கோணா மாணா வென்று செய்தல் - கோணல்மாணலாக

கோதானம் பூதானம் முதலிய மாதானங்கள் செய்தல்

(பிரதாப அதி. 31)

கோபதாபம் கொள்ளாமல் இருத்தல்

கோபத்தையும் பொறாமையையும் கிளப்பிவிடல்

கோபமாகவும் அதட்டலாகவும் பேசுதல்

கோபமும் ஆத்திரமும் கொள்ளுதல்

கோபமும் கொதிப்பும் கொள்ளுதல்

கோபமும் வெறுப்பும் குமுறிக்கொண்டு வரல்

கோயில் குளம் கட்டிவைத்தல்