பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

கோர பயங்கரத் தாண்டவம் (கல்கி)

கோள் குண்டுணி சொல்கிறவன்

சக்கல் மக்கலான - மக்கி மங்கிய

சக்கி முக்கிக்கல்

சக்தியும் செல்வாக்கும் உடையவர் (கல்கி)

சக்தியும் வலிமையும் தீவிரமும் ததும்பப் பேசுதல் ; செயலாற்றுதல்

சகதியும் சேறுமாயிருக்குமிடம்

சகலமங்கல சம்பிரம ஆடம்பரங்களுடன் (மனுமுறை)

சங்கடமோ சலிப்போ இல்லாமல்

சங்காமல் சலிக்காமல் வேலை செய்தல்

சங்காமல் சலிக்காமல் பணிசெய்தல்

சங்கு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் வெண்மணல் (ச 136-2)

சஞ்சலமும் சலிப்பும் இல்லாமல்

சட்டங்கள் கற்றும் பட்டங்கள் பெற்றும் வாழும் வழக்கறிஞர்கள்

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுதல்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டொழுகுதல்

சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படல்

சட்ட திட்டங்களோ விதிமுறைகளோ இன்றி

சட்ட வட்டமாய்ச் சுற்றுதல் (குடும்பவிளக்கு )

சட்டிபானை கழுவுதல்

சட்டி முட்டிகள் - சட்டிபானைகள்

சடங்குகளும் சம்பிரதாயங்களும் எதற்கு?

சடுதி மடு தியாய் (-விரைவாய்ச்) செய்தல் ; செல்லுதல்

சண்டியிலும் சண்டி சகசண்டி

சண்டு சருகுகளை அரித்தல்

சண்டாளப் பாதகன்; பாவி