பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுதல்

சிந்திச் சிதறிய சோறு

சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்தல்

சிந்தித்துச் செயலாற்றுதல்

சிந்தித்துத் தேர்தல்

சிந்தித்து வந்திப்போம் இறைவனை

சிந்துமணி சிதறுமணிகளைப் பொறுக்கிக் கொள்ளல்

சிந்தைக்கும் செவிக்கும் இனிய பாசுரங்கள்

சிந்தை கலங்கித் திகைத்து அலமருதல் (நள வெ 331)

சிந்தைக்கினிய செவிக்கினிய சொற்பொழிவு

சிந்தை செயல் சொல் எல்லாம் ஒத்திருத்தல்

சிந்தை நைந்து உருகுதல்

சிந்தை நொந்து நைந்து வெம்புதல்

சிந்தை நொந்துருகும் அன்பர் பஞ்சபாசந்தனை நீக்கும்

கந்தன் (குன்றக் 7)

சிந்தை மயங்கித்தியங்கல் (அருட்பா )

சிந்தை மெலிவுற நொந்து வருந்துதல் (வில்லி 4-39)

சிந்தையில் தெளிந்த கல்விச் செழுமதி அமைச்சர்

(வில்லி 27-166)

சிந்தையிலும் சென்னியிலும் வைத்துப் போற்றுதல்

சிந்தையிற் சிவனடி மறவாத செம்மையினர்

சிந்தையும் மனமுஞ் செல்லா நிலைமைத்தாய வீடு (பரி

மேலழகர்)

சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்து வீடு

சிம்பல் சிலும்பல் - கந்தை

சிரக்கம்பம் கரக்கம்பஞ் செய்தல் - தலையசைத்துக் கை

தட்டுதல்

சிரித்துப் பரிகசித்துக் கலாட்டா செய்தல்

சிரிப்புங் களிப்புமாக இருத்தல் (கல்கி)