பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சின்னது சிறியதையெல்லாம் கூட்டிக் கொண்டுபோதல்

சின்னப்பட்டுச் சீரழிதல்

சின்ன பின்னமாக்கல்

சின்ன பின்னமாகச் சிதைத்தல்

சின்னபின்னமாய்ச் சிதறிவிடுதல்; சிதறுண்டு கிடத்தல்

சினமும் சீற்றமும்

சின்ன பின்னமடைந்து சிதறி (ச் சேனை) ஓடுதல்

சின்னன் பின்னன் - சிறியதும் பெரியதும்

சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினர்

சின்னா பின்னமாக்கிச் சீர்குலைத்தல் (சோமு. மன்மத)

சின்னா பின்னமாய்ச் சிதறல்

சீட்டு நாட்டுப் போட்டு வைத்திருத்தல்

சீத்துப் பூத்தென்று சீறும் பாம்பு; அழுதல்

சீதனம் சீராட்டு நிரம்பக் கிடைக்கப் பெற்றவள்

சீமான்களும் கோமான்களும் பூமான்களும்

சீயென்று பேயென்று நாயென்று பிறரைத் தீங்கு

செய்யா திரு (அருட்பா)

சீலந்தாங்கித் தானந் தலை நிற்றல் (மணி 30-78)

சீலமும் செல்வமும் உடையவர்

சீர்குலைத்துச் சின்னாபின்ன மாக்குதல் (ரகுநாதன்)

சீர்குலைந்து சின்ன பின்னமாய்ச் சிதைந்து கிடத்தல்

(திரவிடத்தாய் 23)

சீர்கெட்டுச் சிதைந்த

சீர்கொழிக்கும் சீமை

சீர்செனத்திகள் செய்தல்

சீர்த்தியும் சிறப்பும்

சீர்தூக்கி ஆராய்தல்

சீர்பட்டுச் செம்மைப்பட்ட

சீர்படுத்திச் செவ்வி தாக்கல்; செம்மையாக்கல்