பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சுக துக்கங்களில் பங்கு கொள்வோர்

சுட்டிக் குறிப்பிடல்

சுட்டுப் பொசுக்குதல்

சுட்டு வீழ்த்தல்

சுட்டு எரித்துச் சாம்பராக்குதல் (கல்கி)

சுடர்விட்டெரிந்து சுவாலை பரப்பும் (விளக்கு)

சுடு சொல்லால் உள்ளத்தைச் சுடல்

சுடுதி மடுதியாய் - விரைவாய்

சுத்தமும் சுகாதாரமும்

சுதந்திரத்தையும் கௌரவத்தையும் இழந்து வாழ்தல்

(கல்கி)

சுதந்திரமாய்ச் சுயேச்சையாய்த் திரி; இரு

சுய நலத்தையும் சுகபோகத்தையும் விரும்புதல்

சுயமாகவும் சொந்தமாகவும் செய்தல்

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

சுருங்கித் திரைந்த உடல்

சுவைக்கினிதாகிய குய்யுடை அடிசில் (புறம் 127)

சுவைத்து உருசி பார்த்தல்

சுவையும் பயனுமுடைய நூல்

சுவையும் மணமும் நிறைந்த பால்

சுழித்து நுரைத்துக் கொப்பளிக்கும் கடலலைகள்

சுள்ளி சுப்பல்களைப் பொறுக்கி எரித்தல்

(படுக்கையைச்) சுற்றிச் சுருட்டிக்கொண்டு போதல்

சுற்றிச் சுழற்றி யடித்தல்

சுற்றிச் சுற்றி அலைந்து திரியும்

சுற்றித் திரிதல்

சுற்றிவளைக்காமல் நேராய் உடைத்துச் சொல் (குகப்

ரியை)

சுற்றுச் சூழ்நிலைகள்