83
சுற்றுஞ் சுழற்றுமாய்ச் செல்லும் வழி
சுற்றுமுற்றும் பார்த்தல் - நான்கு பக்கமும் பார்த்தல்
சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் உடைய
சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் உடைய வாழ்க்கை
சூட்சாதி சூட்சத்துல்லியன்
சூட்டோடு சூடாய் (- உடனுக்குடனே)ச் செய்தல்
சூடாறிக் குளிர்ந்து கிடத்தல்
சூடு சுரணை இல்லாதவன்
சூதும் வாதும் வேதனை செய்யும் (கொன்றை 31)
சூது வாது இல்லாத சாது (கல்கி)
சூது வாது கள்ளங் கபடு தெரியாதவன்
சூழ் நிலையும் சுற்றுச் சார்புகளும்
சூம்பிச் சாம்பிக் குன்றிப் போய் நிற்றல்
சூழ்ச்சி செய்து வீழ்ச்சி யடையச்செய்த
சூழ்ந்து சுற்றிக் கொள்ளுதல்
சூளிகை வகுத்த மாளிகை (குமர 582-9) (சூளிகை -
- மாடியிலுள்ள அறை)
செக்கச் சிவந்த (-மிகச் சிவந்த) கண்கள்
செக்கச் செவேலெனச் சிவத்தல்
செங்கதிர் எழுந்து சீறின் செறி இருள் நிற்பதுண்டோ?
- (வில்லி 27-174)
செஞ்சடை வானவன் (சிலப் 26-98)
செஞ்சூட்டுச் செஞ்சேவல் (வைண 2-4)
செட்டாகவும் மட்டாகவும் செலவு செய்பவன்
செட்டுங் கட்டுமாய்க் குடித்தனஞ் செய்தல் (அம்மணி
- 39)
செட்டுஞ் சிக்கனமும் உடையவர்
செடி கொடிகள்
செடிகொடி புல் பூண்டுகள் முளைக்காத இடம்