உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

செடி செத்தைகளை அகற்றுதல்

செத்தாரோ பிழைத்தாரோ சேதி தெரியவில்லை (பஞ்ச

வனவாசம்)

செத்துச் சாம்பலாய்ப் போன

செத்துச் சுண்ணாம்பாய்ப் போதல்

செத்து மடிந்து போதல்

செத்தை சருகுகள்

செதுக்கி வைத்த செப்புச்சிலை போன்றவள்

செந்துவர் மழலைச் செவ்வாய்ச் சிறுவர் (பாகவதபு 4-

5-40)

செந்தமிழ் பழுத்த நாவின் தீஞ்சுவைப் புலவர்

செந்தமிழ் விளங்கிய தெய்வ நாடு (பேரூர்ப்பு 35-1)

செந்தீக் கருந்துளைய தீங்குழல் (சிந் 292)

செந்தீச் செவ்வழல் (கலித்)

செந்நெலின் வாளையும் செல்வ நாடும் உடைய

கோமான் (வில்லி 11-12)

செப்பமாகவும் திட்பமாகவும் செய்து முடித்தல்

செப்பமும் செம்மையும் பெறும்; பெற்ற

செப்பனிட்டுப் புதுப்பித்தல்

செம்மாந்து இறுமாந்திருக்கும்

செம்மையாகவும் சிறப்பாகவும் செய்தல் (நெடுஞ்செழி)

செம்மையாகவும் செவ்வையாகவும் செய்தல்

செம்மையும் திருத்தமும் பெறச் செய்தல்

செய்வதறியாது திகைத்தல்

செய்வதறியாமல் திகைத்து நிற்றல்

செய்வன செய்து தவிர்வன தவிர்தல்

செயலருஞ் செய்வினை (செய்தவர்) (அகம் 93)

செருக்கும் சினமும் கொண்ட

செருக்கும் தருக்கும் செறிந்த