பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

86

செற்றமும் சீற்றமும் முற்றிய (பகைவரிடத்து)

செற்றையும் குப்பையும் சேர்த்து வைத்த இடம் செறிந்து ::நெருங்கிய புதர்

செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர் (அகம் 96)

சேமலாபம் விசாரித்தல்

சேர்ந்து இயைந்து செறிதல்

சேர்ந்து பொருந்தும் இயல்பு

சேவித்துப் பணி செய்யும் சேவகர்

சேறும் சகதியுமாய் இருக்குமிடம்

சொக்கி மயங்கிப் போதல்

சொகுசாகவும் சுகமாகவும் வாழ்வோர்

சொச்சம் மிச்சம் இல்லாமல் செலவழித்தல்

சொட்டை சொள்ளை - குற்றங்குறை

சொட்டையும் சொள்ளையுமான முத்து (ஔவைசு)

சொத்து சுகம் படைத்தவன் ; இல்லாதவன்

சொத்து சுதந்திரங்களைப் பறித்துக் கொள்ளல்

சொத்து சுதந்திரம் இல்லாதவன்

சொத்து சுதந்திரம் நிலம்புலம் ஏதாவது உண்டா

(கல்கி )

சொத்துப் பத்து உள்ளவன்

சொத்தை சொள்ளை என்று ஒதுக்கித் தள்ளுதல்

சொத்தை சோடை இல்லாத பொருளாய்ப் பார்த்து

வாங்கு

சொத்தையும் சொள்ளையுமாய் இருக்கும் காய்கறிகள்

சொரி சிரங்கு

சொல்லவும் மாட்டாமல் மெல்லவும் மாட்டாமல் பரம

சங்கடமான நிலையிலிருத்தல் (சந்திரிகா 34)

சொல்லவும் முடியாமல் விள்ளவும் முடியாமல் தவித்தல்