பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஞானமும் கல்வியும் நயந்த சிந்தையர்

தக்கார் மிக்கார் (பெரியாழ்வார்)

தக்கி முக்கிக்கொண்டு படியேறுதல்

தகடு முகடாய் (- கண்மூடித்தனமாகச்) செலவு செய்தல்

தகர்த்து நொறுக்குதல்

தகுதியும் திறமையும் உடையவர்

தகுதியும் பொருத்தமும் இல்லாத

தங்கமும் வெள்ளியும் வைரமும் வைடூரியமும்

தங்கித் தாமதப் படுதல்

தங்கு தடுமாற்றம் இல்லாமல் ஓடும் நடை; நீர்

தங்கு தடையில்லாமல் பேசுதல்

தஞ்சம் என்பவருக்கு அஞ்சல் என்று அருள் தருபவன்

(குன்றக் 6)

தஞ்சமென்றவர்க்கு அஞ்சல் என்று அபயமளிப்பவன்

தஞ்சமென வந்தோரின் பஞ்சம் போக்கும் தஞ்சை

தட்டல் தடவல் - முட்டுப்பாடு

தட்டாமல் தடுக்காமல் (தட்டாமல் முட்டாமல்) தாராள

மாய் நுழைந்து செல்லும் வழி

தட்டிக்கொட்டி மட்பாண்டம் வாங்குதல்

தட்டி எழுப்பி உற்சாகமூட்டுதல்

தட்டுக்கெட்டுத் தடுமாறுதல்

தட்டுத்தடங்கல் இல்லாமல் ஓடும் நீர்

தட்டுத் தடங்கலின்றிப் பேசுதல்

தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசுதல்

தட்டுத் தடுமாறித் தள்ளாடி நடத்தல் (கல்கி)

தட்டுத் தடுமாறிப் பேசுதல்; விழுதல்

தட்டுத் தடையின்றி ஓடும் வெள்ளம்

தட்டுத் தடையின்றிப் பேசுதல்