உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தளர்ச்சி நீங்கி கிளர்ச்சி கொள்ளல்

தளர்த்தி நெகிழ்த்துதல்

தளர்ந்து சோர்தல்

தளர்ந்தும் நெகிழ்ந்தும் இருக்கும்

தளர்ந்து மனம் ஒடுங்கியிருக்கும்

தளிபொழி தளிரன்ன எழில்மேனி (கலித் 13)

தளிர்த்துத் தழைத்துக் கிளைத்தல்

தளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனிதல்

தளிரன்ன எழில்மேனி (கலித் 40)

தளுக்கிக் குலுக்கி நடக்கும் ஒய்யாரி

தளுக்கிக் குலுக்கிப் பிலுக்கும் பெண்கள்

தளுக்கிக் குலுக்கி மினுக்கும் சாகசக்காரி

தளுக்கி மினுக்கும் ஒய்யாரி

தறுக்குப் பிறுக்கு என்று சொல்லாதே (நாடோடி)

தன் பெருங் குணத்தால் தன்னைத்தான் அலது ஒப்பு

இலாதாள் (- அநுமன்) (கம்ப 4-2-9)

தன்னந்தனியான இடம்

தன்னந் தனியாக நடந்து செல்லுதல்

தன்னின் நேர்ந்தான் அலாது பிறர் இல்லவன் (கம்ப

6-1436)

தன்னுயிர்போல் மன்னுயிர் என்னும் தண்ணளியாள்

தன்னுயிர் போல மன்னுயிர்காக்கும் மன்னவன்

தன்னொப்பாரில்லாத தலைவன் (செந். மு. சந். 42-7)

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் (அகம் 54)

தன தானிய சம்பத்து உடையவர்

தனித்து ஏகாந்தத்திலிருக்கும் சந்நியாசி

தனுகரண புவன போகங்கள்

தாக்கித் தகர்த்தெறிதல்

தாகங்கொண்டு தவித்தல் (இராமலிங்கசு)