பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலக்கரம்பையாகியக் கழிக என ஒதுக்கிவிட்ட கரம்புகளிலும் புகுந்து, அந்நிலத்து வெடிப்புகளையும் நிரப்பிப் பாய்ந்தது சேரநாட்டோடு பகைகொண்டு சினம்மிகுந்து, போர்ப்பூ அணிந்து சீறிப் பாய்ப்பவர்போல், இடைவழியில் குறுக்கிட்ட மலரும் தழையும் மறைக்க விரைந்தோடி வரும் பேரியாற்றின் பேரிரைச்சலும், ஆ ற் று நீரைக் கால்வாய்களில் கட்டித் திருப்புவோரும், அது உடைத்துக் கொண்டு ஒடும் மடைகளை அடைப்போகுமாகிய உழவர் எழுப்பும் ஆரவாரப் பேரொலியுமல்லது, பகைவர் புகக் கண்டோ, பசியும் பிணியும் வருத்தக் கண்டோ கண்ணிர் சிந்தி அழுவார் ஒலி நாட்டில் இல்லை.

பேரியாற்றின் பெருமை, அப்பேரியாற்றைப் பயன் கொண்டு வளம் பெருக்கும் அந்நாட்டு மக்களின் மாண்பு ஆகியவற்றைச் கண்டு களிப்புற்றவாறே, புலவர் சேர நாட்டின் நலைநகருள் புகுந்தார். ஆங்கு அவர் கண்டகாட்சி பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பகைவெல்லும் போர் வன்மையைப் பறை சாற்றுவதாய் இருந்தது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பகைவர் ஆற்றல் அற்றவரோ, படைவலம் இழந்தவரோ அல்லர். போர் முறை தெரிந்தவர். அறிந்த போர் முறை நெறி நின்று, எதிர்த்தாரை அழித்தொழிக்கவல்ல பேராண்மையும், போர்த் தந்திரமும் கைவரப் பெற்றவர். அவர்பால் கணக்கற்ற களிறுகளைக் கொண்ட பெரிய நாற்படையும் இருந்தது. அத் துணை ஆற்றல் வாய்ந்த அப்படைகளையும் அழித்து, அவ்வரசர்களையும் வென்று, வீறு பெற்ருன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன். அவனுக்கு அத்துணைப் பெருவெற்றி கிட்டத் துணை புரிந்தவர், அவன் வில்வீரர். காலில் கழல் புனைந்து களம் புகுந்தால், அவர்கள் விற்களிலிருந்து புறப்படும் அம்புகள், ஆழப் புதைந்து ஆக்கிய பகைவர்

90

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/100&oldid=1293736" இலிருந்து மீள்விக்கப்பட்டது