பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை; இன்று காண்பதும் உண்மை. பண்டு பேராற்றல் பெற்றிருந்த யாங்கள், இன்று போர் முறையையே மறந்து கிடப்பதற்கு எம் அரசன் ஆட்சி முறையே காரணம். அவன் ஆட்சி நலத்தால் நாடு பகையற்று விட்டது. பகையில்லாது போகவே, போர் நிகழ்ச்சிக்கு இடம் இல்லாது போயிற்று இந்நிலைப் ப ல் லா ன் டு காலமாகத் தொடர்ந்து நிலை பெறுவதால், படைக்கலத்தைத் தொடவேண்டிய வாய்ப்பே எங்களுக்கு கிட்டாது போயிற்று. அதல்ை, அப்பயிற்சியும் அறவே மறந்து ேப ா ய் வி ட் ட து. யாதுசெய்வோம்! அம்மட்டோ? கோடையினும் கரைபுரண்டு ஓடும் பேரியாற்றைப் பெற்றுளது நாடு; அதல்ை வயல் வளமும், அது தொடர்பாகப் பல்வேறு வளமும் நாட்டில் மண்டிக்கிடக். கின்றன. அதல்ை போர் குறித்து மட்டுமல்லாமல், பொருள் தேடல் குறித்தும், பிறிதோரிடம் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு வாய்க்கவில்லை. ஆகவே, மனைவி மக்களோடு வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கிருேம் நாங்கள்' என்று விடையிறுத்தான்். அது கேட்ட புலவர் உள்ளம், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பாராளும் பெருமையை எண்ணிப் பெருமிதம் கொள்ள, அவர் வாய் நாவாரப் பாராட்டிப் பாடல்

புனைந்து பெருமை செய்தது.

அப்பாட்டில், பகைவர் படைகொண்டு புக அஞ்சும் பேராற்றல் வாய்ந்தவன் பல்யானைச் செல்கெகுட்டுவன் என்ற உண்மையையும், பேராற்றுப் பாய்ச்சலால் பயன்மிகும் பெருமை வாய்ந்தது அவன் நாடு என்ற உண்மையையும் போர்ப்பூ அணிந்து புகும் பகைவர் படைபோல், மலரும், தழையும் மறைக்க மண்டிப் பெருகும் பேரியாறு என்ற பொருள் பொதிந்த உருத்துவரு மலிர்நிறை என்ற தொடர் உணர்த்தும் நயம் கண்டு, அத்தொடரால் அப்பாட்டிற்குப் பெயர் சூட்டியுள்ளார்கள் நல்லோர்.

92

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/102&oldid=1293738" இலிருந்து மீள்விக்கப்பட்டது