பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருவுடைத்து அம்ம பெருவிறல் பகைவர்

பையங்கண் யானைப் புணர்நிரை துமிய உரம் துரந்து எறிந்த கறை அடிக் கழற்கால் கடுமா மறவர் கதழ் தொடை மறப்ப

5. இளைஇனிது தந்து விளைவு முட்டுருது

புலம்பா உறையுள் நீ தொழிலாற்றலின் விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக், கோடை நீடக், குன்றம் புல்லென, அருவிஅற்ற பெருவறற் காலையும்

10 நிவந்து கரை இழிதரும் நனந்தலைப் பேரியாற்றுச்

சீருடை வியன்புலம் வாய்பரந்து மீகீஇயர், உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை அரிது நின் அகன்தலை நாடே’’.

துறை: நாடு வாழ்த்து வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துாக்கு பெயர்: உருத்துவரு மலிர்நிறை

நீ தொழில் ஆற்றலின் (1-6) நின் அகன்தலைநாடு (14) வெம்மை அரிது(14) திருவுடைத்து (1) எனக் கூட்டிப் பொருள் கொள்க.

பெருவிறல் பகைவர் = பெருவலி படைத்த பகைவ. ருடைய பைங்கண் யானைப் பு ண ர் நி ைரது மிய - கூரியகண்களை உடைய யானைகளைக் கொண்ட படைவரிசை அழியுமாறு. உரம் துரந்து எறிந்த = ஆற்றல் அனைத்தும் காட்டிப் போரிட்டு வென்ற கறை அடிக் கழற்கால் கடுமா மறவர் = பகைவர் குருதிக்கறை படிந்த, வீரக்கழல் புனைத்த

93

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/103&oldid=1293739" இலிருந்து மீள்விக்கப்பட்டது