பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்களையுடைய, குதிரைபோல் விரைந்து போரிடவல்ல வில். வீரர்கள். கதழ்தொடை மறப்ப = விரைவாக அம்பேவும் தம்தொழிலை மறந்து போடும்படி இனை இனிது தந்து = நாடுகாவல் தொழிலை நன்கு நடாத்தி. விளைவு முட்குறுது = விளைநலம் குறைவுருமல் புலம்பா உறையுள் நீ தொழில் = ஆற்றலின் இல்லக்கிழக்தியரை விட்டுப் பிரிந்து தனித்துறையும் வாழ்க்கையைப் பெறவேண்டுவதில்லா நின் வீரரை போலவே. கூடிவாழும் வாழ்க்கைநலம் வாய்க்கப் பெற்ற நீ ஆட்சி புரிவதால். கோடை நீட = கே எ ைட கால ம் நீட்டித்தலால். குன்றம் புல்வென = குன்றுகள் பொலி விழந்து போடுமாறு. அருவி அற்ற பெருவற்ற காலையும் = அருவிகள் நீர் அற்றுப் போன பெரிய வறட்சி உற்ற காலத் திலும், விடுநிலக்கரம்பை = மேய்புலத்திற்கு எனக் கழித்து விடப்பட்ட கரம்புநிலங்களின் விடர் அளை = நிறைய வெடிப்பு களிலும் நீர் நிறைந்து தேங்குமாறு. நிவந்து = பெருகி. கரை இழிதரும்=கரைபுரண்டு ஓடும். நனந்தலைப் பேரியாற்று= இடம் அகன்ற பேரியாற்றின், சீருடை வியன்புலம் = பாய்ச்சலால் பயன் கொண்டு சிறப்புமிகும் விளை வயல்கள். வாய்பரந்து மீகீஇயர் = மிகப்பலவாகி மேலும் வளர்தல் வேண்டி, உவலை குடி=தழைகளைச் சுமந்து, உருத்துவரு மலிர் நிறை= கிம்மிக்கு விரைந்து பாயும் பேரியாற்றின், செந்நீர்ப் பூசல் அல்லது = நீர்பாய்வதால் எழும் ஆரவாரமல்லது, நின்அகன்தலை நாடு - பரந்து அகன்ற உன் நாடு, வெம்மை அரிது = வேறு கொடுமையை அறியாது, திருவுடைத்து = ஆகவே கண்டாரால் விரும்பப்படும் கவின் உடைத்து,

மாலையும், கண்ணியும் சூடி விரையும் மன்னர் போல் மலரும் தழையும் மிதக்கப் பாயும் பேரியாற்றின் பெருமையை, 'கோங்கம் வேங்கை, தூங்கினர்க் கொன்னை, நாகம், திலகம், நறுங்காழ் ஆரம், முதிர்பூம் பரப்பின் ஒழுகு புனல்

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/104&oldid=1302877" இலிருந்து மீள்விக்கப்பட்டது