பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வெண்கை மகளிர்

மருத்வளத்தால் மாண்புற்றது அந்நாடு. நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே பெற்றிருந்தமையால் பார்க்குமிடம் எங்கும்,நெல்விளையும் நன்செய்களே காட்சி அளிக்கும். வளம் மிகுதியால், நெற்கதிர்கள் நி மி ர் ந் து நிற்கமாட்டாக் கணமுடையதாகித் தலைசாய்ந்து, வரப்புகளிலும் வயல்களிலும் வீழ்ந்து கிடக்கும். வயல்களிலும் வாய்க்கால்களிலும் நீர் அடையரு திருக்குமாதலின், அவ்விடங்களில் அயிரை முதலாம் பல்வேறு மீன் வகைகள் ஒன்று பலவாகப் பெருகி விளையாடித் திரியும். வயல்களை அடுத்து வாழைகளும், அவற்றிற்கு அணித்தாக, மா மருதம் காஞ்சி போன்ற மரங்களும் வளமுற வளர்ந்து வானளாவ உயர்ந்து நிற்கும். வாழையும் நெல்லும் வளங்கொழிக்கும் அவ்வயலருகே, வளையணியும் பருவமும்வாய்க்கப்பெருத கன்னிஇளம் மகளிர் ஆடியும் பாடியும் திரிவர். அவர்கள், வயலில் முற்றித் தலைசாய்ந்து கிடக்கும் செந்நெற்கதிர்களைக் கொய்து வத்து, உரலில் இட்டு அவல் இடித்து உண்டும், அது தீர்ந்ததும், உலக்கைகளைச் சார்த்த வேறு சார்பிடம் காணுமையால் வாழை மரங்களில் சார்த்திவிட்டு, வயல்களில் மலர்ந்து மணக்கும் வள்ளைமலர்களைப் பறித்துச் சூடி மாண்புற்றும், இடையிடையே வயல்களில் இரைதேடி அலையும் நாரைகளையும், வாய்க்கால்களில் அயிரை மீன் உண்டு பசியாறிய பின்னரும், அவ்விடம் விட்டு அகலாமல், வயலருகு மரங்களில் அமர்ந்திருக்கும் கொக்கும் புறாவும், உள்ளலும் போலும் நீர்ப்பறவைக் கூட்டங்களை விரட்டி அடித்தும் விளையாடி மகிழ்வர்.

இவ்வாறு வயல்வளத்தால் சிறந்து விளங்குதலின், அப்பேரூர்களில் எக்காலமும் ஏதேனும் ஒவ்வொரு காரணம்

96

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/106&oldid=1293743" இலிருந்து மீள்விக்கப்பட்டது