பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி @母 அடங்கியிருந்தால்,சேரலாதன் !_{o}l- அச்சிற்றரசன் நாட்டில் புகுந்திராது. அப்படை, அவன் நாட்டைக் கடந்து அப்பாற் சென்றதும், பண்டேபோல், தன் பெருவளப் பேரின்ப வாழ்வில் மிதந்திருக்கலாம். ஆனால், அம்முரசொலி கேட்டும், அடங்காது எதிர்சென்றதால் வந்துற்றது இவ்வழிவுநிலை,

பகைவன் நாட்டு இயற்கை நலத்தைப் பாராட்டு வார்போல், பகைவன் அறிவின்மையே இவ்வழிவிற்குக் காரணமல்லது, பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் போர் வெறி காரணமாகாது என்பதை, உரையாது உணர்த்துச் சென்றுள்ளார் புலவர். புலவர் பாடிய இப்பாட்டின் ஒவ்வொரு சொல்லும் இனிக்கிறது என்ருலும், வளையல் அணியவும் அறியாத இளம் மகளிர், ஆடுதல் தவிர்த்து அடுதல் முதலாம் தொழில் எதுவும் கல்லாத கன்னியர் எனப் பல்வேறு பொருள் நலம் தோன்ற தொடுத்துள்ள வெண்கை மகளிர் என்ற தொடரே, சாலச் சிறப்புடைத்தாதல் கண்டு, இப் பாட்டிற்கு, அத்தொடரையே பெயராகச் சூட்டிப் பெருமை செய்துள்ளார், யாரோ ஒரு பெரியார்.

29. அவல் எறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த தடம்தாள் நாரை இரிய, அயிரைக்

5 கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்,

வெண்கை மகளிர் வெண்குருகு ஒப்பும் அழியாவிழிவின், இழியாத் திவவின், வயிரிய மாக்கள் பண் அமைத்து எழிஇ, மன்றம் நண்ணி மறுகு சிறைபாடும்

10 அகன்கண் வைப்பின் நாடு மன்; அளிய

விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட

99

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/109&oldid=1293748" இலிருந்து மீள்விக்கப்பட்டது