பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புகன்ற ஆயம்

வஞ்சி மாநகர்க்கண் உள்ள மன்னவன் பெருங்கோயிலில், வேந்தன் விருந்தினராய் வாழ்ந்திருந்து, பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் .ெ ப ரு ைம க ளை ஒவ்வொன்ருக உணர்ந்து, உணர்ச்சிப் பெருக்கால் உயர்பெரும் பாக்கள் பல புனைந்து பாராட்டி வந்த புலவர் பாலேக்கெளதமனர், ஒருநாள் அவன் போர்முரசின் ஒலிகேட்டார். அம்முழக்கிற்காம் காரணம் யாது என்பதைக் காணவிரும்பி, விருந்தினர் மாளிகைவிடுத்து வெளிப்பட்டு, பிறநாட்டு அரசியல் தூதுவர்கள் வாழும் வீதியில் புகுந்து நடக்கலானர். தமிழ்நாட்டில் அரசோச்சும் பிறவேந்தர்களுள் தலையாயவர்களாகிய சோழர் பாண்டியர் என்ற முடியுடை மன்னர்களின் தூதுவர். களோடு, வேளிர் வழிவந்த பிற குறுநிலத்தலைவர்களின் தூதுவர்களும் அவ்வீதியில் வாழ்ந்திருந்தனர். அவர்கள் வளத்தால் குறைந்த நாடுடையவரோ, எல்லை சுருங்கிய சிறுநாடுடையவரோ அல்லர். ஐந்திணை வளமும் அமையப்பெற்ற அகன்ற பெரிய நாடாளும் நல்வாய்ப்புடையவர் அவர்கள்.

மகளிர் விரும்பும் வனப்புமிகு மலர்களைக் கொண்ட புலி நகக்கொன்றை மரங்கள், வரிசை வரிசையாக வளர்ந்திருப்பதால் உரம் பெற்ற கரைகளையும், அக்கரைக்கண் அமைந்த படித்துறைகளையும் கொண்டு, கருநீல மலர்களையும் பசுமைநிற இலைகளையும் உடைய நெய்தற்கொடி படர்ந்து, நீலமணிகள் இழைத்துப் பண்ணப்பட்ட கலம்போல் காட்சி நல்கும் கழிகளில் மீன்கவர்ந்து உண்டு உறுபசி தீர்ந்த நீர்ப்பறவைகள் அமர்ந்து இளைப்பாறும் இடமாகவும், ஆடவரும்மகளிருமாய் மக்கள், மாலை இன்பம் வேட்டுக் கூட்டமாய் வந்து அமரும்

! 02

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/112&oldid=1293751" இலிருந்து மீள்விக்கப்பட்டது