பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு, தமிழகத்தில், அக்காலை அரசோச்சி வாழும் தன்னைத்தவிர்த்த அரசர் அனைவரும் அஞ்சி நடுங்குதற்குக் காரணமாய் முழங்கும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் போர் முரசின் பெருமையையும், அது, அப்போது முழங்கற்காம் காரணத்தையும் காணத்துடிக்கும் ஆர்வம் உந்த, புலவர், முரசுறையும் மன்றம் நோக்கி விரைந்தார்.

ஆங்கு, அது, நன்கு நீராட்டி மாலைசூட்டி நிறுத்தப்பெற்றிருந்தது. நாள்தோறும் வழிபாடாற்றும் விழுக்குடியில் பிறந்தான்் ஒருவன், வழிபாட்டிற்குரிய வீரமந்திரத்தை, கேட்டக்கால் பேயும் கைவிதிர்த்து நடுங்குமாறு கடுங்குரல் எடுத்து ஒலித்து, வீரர்குருதி கலத்துகொண்ட பலிச்சோற்றை, முரசை வலமாகவும் இடமாகவும் மும்முறை சுற்றி வீசினைக. கையால் தொட, பேயும் அஞ்சும், அணுக, எறும்பும் அஞ்சும் அப்பலி சோற்றுத்திரளைப், பிணம் தின்று பழகிய பருந்தும் காக்கையும் மட்டுமே வந்து வயிருர உண்ணலாயின. அந்நிலையில், போர்க்களத்தில் முன்வைத்த காலைப் பின் வைத்து அறியாப் பேராண்மைப் பெரும்புகழும், அப்புகழ்கண்டு கட்டிய வீரக் கழலும் உடையவரும், பெரிய பெரிய போர்க்காங்களிலெல்லாம் .ெ வ ற் றி க ண் ட வீறும் விருப்பமும் உடையவரும் ஆகிய வீரர்களுக்குச், சிறப்புச் செய்வான் வேண்டி, நிலம் அதிர ஒலிக்கும், இடியோசைபோலும் போர் ஒலியை கேட்டும் கேட்டுப் பழகிய அவர் காதுகள் இன்னிசை கேட்டு மகிழ்க. மாற்ருர் மண்கொண்டல்லது சோற்றுணவு கொள்ளேம் எனச் சூளுரைத்துப் போர்க்களம் புகும் அவர் வயிறு, வகைவகையான உணவால் நிறைக என்ற வேட்கை யுடையவனுய், பேரிசை விருந்தும், பெருஞ்சோற்று விருந்தும் அளிக்கும் காட்சியைக் கண்டார். அவ்விருந்திற்கு வீரர்களை அழைக்கும் வேண்டுகோள். குறித்தது அம்முரசொலி. அதுவே அவ்வேந்தர்க்கும் வேளிர்க்கும் அத்துணை அச்சம் ஊட்டிற்று

106

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/116&oldid=1293755" இலிருந்து மீள்விக்கப்பட்டது