பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என அறிந்து, அவன் வெற்றிச்சிறப்பையும், அவ்வெற்றிற்குக் காரணமாம் வீரரைப் புரக்கும் பண்பாட்டுப் பெருமையையும் கண்டார் புலவர்; ஆகவே அவனைப் பாராட்டி மகிழ்ந்தார்.

பாய்ந்து வரும் பகைவர் பெரும்படையை, எதிர் நின்று தடுத்துப் போரிட்டு வெற்றி பெற்றுச் சிறைசெய்து மகிழும் படைவீரர், மேலும் போர் விரும்பும் எம்போல், பாய்ந்துவரும் பெருவெள்ளத்தின் இடைபுகுந்து அணை அமைத்து வெற்றி கண்டு ஆரவாரிக்கும் உழவர் பெருமக்களைப் புகன்ற ஆயம் எனச் சிறப்பித்த நயத்தால், இப்பாட்டிற்கு அதுவே பெயராய் அமைந்தது.

30. “இணர்ததை ஞாழல் மா இதழ் நெய்தல்

மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல், பாசடைப் பனிக்கழி துழை இப் புன்னை வால்இணர்ப் படுசினைக் குருகு இறைகொள்ளும் 5 அல்குறு கானல் ஒங்கு மணல் அடைகரை

தாழ் அடும்பு மலைந்த புணரி வளை நரல இலங்கு நீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும் தண்கடல் படப்பை மென்பாலனவும், காந்தளம் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் 10 செங்கோட்டு ஆமான் ஊளுெடு, காட்ட

மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்று தலைமணந்த புன்புல் வைப்பும், காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது 15 அரிகால் அவித்துப் பலபூ விழவின்,

தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று வெண்தலைச் செம்புனல் பரந்து வாய்மிகுக்கும் பல்சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம்

! 07

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/117&oldid=1293756" இலிருந்து மீள்விக்கப்பட்டது