பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்பாலனவும் (1-8), புன்புலவைப்பும் (9-13), பழனப் பாலும் (14-21). புறவணி வைப்பும் (22-25) கடற்றவும் பிறவும் ஆகிய நிலத்துக்குரிய வேந்தரும் வேளிரும் நடுங்க, (26-31) குரல் அதிர (32), சினம் கடா அய், முழங்கும் மந்திரத்தால், கடவுட் பேணியர், உயந்தோன் ஏந்திய பிண்டத்தையும் (33-35), பேய் மகள் நடுங்க, தூஉய இரும்பலியையும் காக்கையொடு பருந்து ஆர (36-39) மறவர் (40-1), கொளேபுணர்ந்து சோறு உகுத்தற்கு முரசு எறியும் (42-44) எனக்கூட்டிப் பொருள் கொள்க.

இணர்ததை = பூங்கொத்துக்களால் நிறைந்த ஞழல்புலி நகக்கொன்றை மரங்கள் வளர்ந்த கரைகெழு பெருந்துறை = கரையைக் கொண்ட பெரிய தண்ணிர்த்துறையாகிய, மணிக்கலத்தன்ன நீல மணியால் செய்த கலம் போன்ற தோற்றம் உடையதான், மா இதழ் நெய்தல்=கரிய இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்களையும், பாசடைக புதிய இலைகளையும் உடைய, பனிக்கழி குளிர்ந்த கழியில். துழைஇ=மீன் தேர்ந்து உண்டு. புன்னை = புன்னை மரத்தின் வால்இணர்ப்படுகின= வெண்ணிற மலர்களைக் கொண்ட தாழ்ந்த கிளைகளில். குருகு=கொக்கு முதலாம் நீர்ப் பறவைகள். இறை கொள்ளும்=தங்கும் இயல்புடையதும். அல்குறு கானல் மாலைபோதில் மக்கள் வந்து இளைப்பாறும் இயல்புடையதுமாகிய கானற்சோலையின். ஓங்கு மணல் அடைகரை = உயர்ந்த மணல் மேடால் ஆகிய கரையில். தாழ் அடும்பு மலைந்த அ படர்ந்திருக்கும் அடும்பங்கொடிகளை அலைத்த. புணரி வளை ஏஞரல = திரைகொண்டு வந் து ஒதுக்கிய சங்குகள் ஒலிக்க, இலங்கு நீர் முத்தமொடு = ஒளி வீசும் வெண் முத்துக்களோடு, வார்துகிர் எடுக்கும் . நீண்ட பவளக் கொடிகளை மக்கள் வாரிக் கொள்ளும் வளம் வாய்ந்த தண்கடற்படப்பை ச குளிர்ந்த கடலைச் சார்ந்த

109

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/119&oldid=1293758" இலிருந்து மீள்விக்கப்பட்டது