பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்களைக் கொண்ட மென்பாலனவும் = நெய்தல் நிலமும், காந்தள் அம்கண்ணி = காத்தட்பூவால் ஆன கண்ணியினை யும். கொலையில் வேட்டுவர் = கொலை புரியும் கொடிய வில் லினையும் உடைய வேட்டுவர். செங்கோட்டு, ஆமான் ஊைெடு - கூரிய கொம்புகளையுடைய காட்டுப் பசுவின் இறைச்சி கொண்டு. காட்ட மதனுடை வேழத்து = காட்டில் வாழும் மதம் மிக்க யானை க ளி ன் வெண்ணிறக் கோடுகளையும் வேட்டையாடிக்கொண்டு. பொன்உடை நியமித்து = பொன் வளம் மிக்க பேரூர்க்கடை வீதிகளில். பிழிநொடை கொடுக்கும் = கள்விலைக்கு பிற்கும்வளம் வாய்ந்த குன்று தலைமணந்த = குன்றுகள் பலமலிந்த, புன்புலவைப்பும் = முல்லை, குறிஞ்சி நிலங்களைச் சேர்ந்த புன்புலத்துச் சிற்றுார் களும். காலம் அன்றியும் = காலம் அல்லாக் காலத்திலும் . கரும்பு அறுத்து ஒழியாது =கரும்பினை அறுத்துக் கொள்வதோடு ஒழியாது. அரிகால் அவித்து - அதன் அரிகாலையும் அகழ்ந்து அழித்து. பலபூவின் = ஆங்கு மலர்ந்திருக்கும் பல்வேறு மலர்களைக் கொய்யும் மலர்கொய் விழாவினையும். தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று = தேன்துளிர்க்கும் மலர்களைக்கொண்ட மருதமரங்கள் வேரற்று விழுமாறு வீழ்த்தி விட்டு. வெண்தலைச் செய்புனல் = வெண்ணுரை மிதக்கும் செம்புனலானது. பரந்து வாய் மிகுக்கும்=எங்கும் பரந்து இடம் அனைத்தையும் அடைத்துக் கொள்ளும். வெள்ளத்துவெள்ளத்தில். பல சூழ் பதப்பர் பரிய - அணையாக இட்ட பற்பல வைக்கோற் புரிகளைச் சுற்றிப் பண்ணிய மணற்கோட்டைகளெல்லாம் கரைந்து போக, சிறைகொள் பூசலின் = கல்லும் இட்டிகையும் பெய்து அணைகட்கும் ஆரவாரத்தை. புகன்ற ஆயம்=விரும்பி மேற்கொண்டு முடித்த மக்கட் கூட்டம். முழவு இமுழ் மூதூர் விழவுக்கானுரப் பெயரும் - முழவு ஒலிக்கும் பேருர்களில் நிகழும் விழாக்கண்டு. மீள்தற்கு இடமான. செழும் பல் வைப்பின் - வளம்மிக்க எண்ணிலாச்

110

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/120&oldid=1293759" இலிருந்து மீள்விக்கப்பட்டது