பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றுர்களையும் கொண்ட பழனப்பாலும் - மருத நிலப்பகுதி களும். ஏனல் உழவர் = தினேவிளைத்து உண்ணும் உழவர். வரகுமீது இட்ட - வரகு வைக்கோலை மேலே இட்டு வேய்ந்த, கான் மிகு குளவிய = காட்டில் மலரும் காட்டுமல்லிகை வளர்ந்த, அன்புசேர் இருக்கை = அன்பு ததும்பும் தம் மனைகளில், மென்தினை நுவணை = மென்மை வாய்ந்த தினைமாவுணவை. முறைமுறைபடுக்கும் = விருந்தினர்க்கு முறையே அளித்து விருந்தோம்பும், புன்புலம் தரீஇய = புன்செய் நிலங்களைக் கொண்ட புறவு அணி வைப்பும் = முல்லை நிலத்தைச் சேர்ந்த சிற்றுர்களும். பல்பூஞ் செல்மல் காடு = பல்வேறு பூக்களின் காய்ந்த உலர்ந்த சருகுகள் பரந்த காடுகள். பயம் மாறி = பயன்படும் தன்மைகெட்டு. அரக்கத்தன்ன நூன்மணல் கோடு கொண்டு = அரக்குபோல் சிவந்த செம்மணல் மேடுகளாகிய குன்றுகளை உடையவாகி. ஒண்ணுதல் மகளிர் = ஒளிவீசும் நுதலினராய இளம் மகளிர். கழலொடுமறுகும் = காலில் செருப்பணிந்தே செல்லதக்க கொடுமையுடையதாகும். விண் உயர்ந்து ஒங்கிய கடற்றவும் பிறவும் =வானளாவ உயர்ந்த மரங்கள் செறிந்த காட்டு வழி களும் பிறிவும் ஆகிய ஐந்திணை வளங்களையும் ஒருங்கேபெற்ற. பணைகெழுவேந்தரும் வேளிரும்மும் = மும்முரசு முழங்கும் முடியுடை வேந்தரும் பிறகுறு நிலத்தலைவர்களும். ஒன்று. மொழிந்து = ஒன்று கூடிப் பேசி ஒத்த கருத்துடையராய். கடலவும் காட்டவும் அரண் வலியார் = கடல் அரனும் காட்டரனும் அமைத்து வலியராகவும். நடுங்க = அஞ்சி நடுங்குமாறு. முரண்மிகு கடுங்குரல் = மாறுபாடுமிக்க போர் நிகழ்ச்சியைப் புலப்படுத்தும் போர்முரசின் கடிய ஒலியானது. விசும்பு அடைபு அதிர - விசும்பகமெல்லாம் பரவி எதிரொலிக்க. கடும் சினம் கடாஅய் = கேட்கும் வீரர் உள்ளத்தில் கொடிய சினம் முளப்பண்ணி. முழங்கும் மந்திரத்து = வாய்விட்டு ஒலிக்கும் மந்திரத்தால். அருந்

111

111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/121&oldid=1293761" இலிருந்து மீள்விக்கப்பட்டது