பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாட்டுடைத்தலைவன்

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

"வேழம் உடைத்து மலைநாடு" என்றார் ஒரு பெரியார். குறவரும் மருளும் குன்றுகளைக் கொண்டது ஆதலின், வேழங்களால் மலிந்து விளங்கிய, சேர நாடாண்ட பெருவேந்தர் நாற்படையுள், வேழப்படையே சிறந்து விளங்கும். அவ்வேழப்படையின் பெருமைகண்டு வியந்த புலவர் ஒருவர், "ஆனிரை ஒம்பும் அருந்தொழில் மேற்கொண்டவராய அந்நாட்டுக் கொங்கரின் ஆணிரைச்செல்வங்களைப் போலவே, அந்நாட்டு நாற்படையைச் சேர்ந்த வேழங்களை, எண்ணிக் காண்பதும் இயலாது ஆதலின், அக்களிற்றுப் படைக்காட்சி, கொங்கரின் ஆனிரைக் காட்சியையே நினைப்பூட்டும் எனக் கூறிப் பாராட்டியுள்ளார்.

"சேண்பரன்முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்
 ஆபரந்தன்ன பல்செலவின்
 யாமி காண்பல் அவன் தானையானே".

-பதிற்றுப்பத்து: 77: 10-12.

தன் நாட்டு நாற்படையுள், வேழங்களே நிறைந்து விளங்குமாறு, வேழங்களை, இயல்பாகவே மிகுதியாகப் பெற்றிருந்த அச்சேர நாட்டுள்ளும், வேழங்களை நனிமிக மிகுதியாகப் பெற்று, அதனால், வேழக்காடு அல்லது உம்பற்காடு எனப் பெயர் பெற்ற, காட்டுநாடு ஒன்றும், அந்நாட்டகத்தே இருந்தது. முள்நிறைந்த இண்டஞ்செடிகளோடு, பிரம்புக் கொடிகள் பின்னிக்கிடக்கும் புதரிடத்தே, சூல்கொண்டு

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/19&oldid=1318733" இலிருந்து மீள்விக்கப்பட்டது