பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு ஒழித்துக் கிடக்கும் பெண்புலிக்கு, அது விரும்பும் வேழஉணவைத் தருவான்விரும்பி, வேட்டை மேற் சென்று, பெருங்கோடுகள் படுமாறு, ஆண்டுமுதிர்ந்த ஆண்யானையை, வலப்பக்கத்தே வீழுமாறு வீழ்த்திக் கொன்று, வழியிடைப் பாறைகளின் அகன்ற இடமெல்லாம் அதன் குருதிக்கறை படிந்து சிவந்து தோன்றுமாறு ஈர்த்துச்சென்று களித்து, அவ்வெற்றிக் களிப்பால், புல்தரையில் வீழ்ந்து புரண்டுபுரண்டு எழும் புலிப்போத்து உலாவும் கொடுமையுடையது, உம்பற்காடு எனக்கண்ட, அக்காடுவாழ் வேழங்கள், அக்காட்டு, வாழ்வை வெறுத்துப், பெருங்கூட்டமாக வெளியேறி, வழியில் கிடைக்கும் பலாச்சுளைகளைத் தின்று பசியாறியவாறே, வழிநடந்து வேற்றிடம் செல்லும், அம் உம்பற்காட்டின் இயல்பினை அழகுறப் பாடியுள்ளார் ஒரு புலவர்.

கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த வான்முகை இறும்பில் வயவொடு வதிந்த உண்ணுப் பிணவின் உயக்கம் தீரிய தடமருப்பு யானை வலம்படத் தொலைச்சி வியலறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி பயில் இருங்கானத்து, வழங்கல் செல்லாது பெருங்களிற்று இனநிரை கைதொடுஉப் பெயரும் தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பற்

பெருங்காடு'. -அகம் : 357

அவ்வும்பறக்காட்டு நாட்டாட்சியைத் தனதாக்கிக் கொண்டு, அக்காட்டு வேழங்களையெல்லாம் தன்படையில் பணிகொண்டமையால், பிற சேரநாட்டு அரசர்களின் நாற். படையில் காணலாகும் வேழங்களைக் காட்டிலும் மிகுதியான வேழங்களைக்கொண்ட நாற்படையால் சிறந்து விளங்கின்ை

10

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/20&oldid=1293641" இலிருந்து மீள்விக்கப்பட்டது