பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரலாதன். பெரும்புலவர் பரணர்க்கு அந்நாட்டு வருவாய் அனைத்தையுமே வாரி வழங்கின்ை, கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவ்வாறு, சேரர்க்கு உரிமையுடையதும், சிறந்தபல செல்வநலம் வாய்க்கப் பெற்றதுமான அவ்வும்பற்காடு, ஒருகாலத்தில், சேரஆட்சியின் எல்லைக்கு அகப்படாது அகன்றுகிடந்தது. அதனல், அரியணை அமர்ந்த பல்யானை செல்கெழுகுட்டுவன், தன்முதற்பெரும் பணியாக, ஆங்குத் தன் கோல்நிலவப் பண்ணிப் புகழ்கொண்ட்ான்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கோலோச்சத் தொடங்கிய காலத்தே. சேரநாட்டின் அகத்தும் புறத்துமாகக் கொங்கர், பூழியர், மழவர் போலும், கொற்றம்மிக்க மறவர்குலத்து மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனிரைச் செல்வங்களை அரும்பாடுபட்டுப் பேணி வந்தமையால் பெறலாகும் பெருவாழ்வின ராதலோடு, வாட்போரில் வல்லராகவும், கல்கால்கவணை எனும் அருங்கலப்பொறியால், ப ைக வ ர் த ம் பற்றற்கரிய பேரரண்களையும் பாழ்செய்ய வல்லவராகவும் விளங்கின. மையால், கிள்ளிவளவன் போலும் சோழர்குலத்தவரும், பசும்பூண்பாண்டியன் போலும் பாண்டியர் குலத்தவரும் ஆய் அண்டிரன் போலும் குறுநிலத்தலைவர்களும், அஞ்சவல்ல ஆற்றல்வாய்ந்தவர் கொங்கர். கொங்கரைப் போலவே, ஆடு மாடு மேய்க்கும் தொழில் உடையராதலோடு, காடுவாழ் க ளி று க ளே க் கைப்பற்றிவந்து பழக்கிப் பணிகொள்ளவும் வல்லராய் வாழ்ந்தும், கறவைகளைக் காட்டில் மேயவிடுத்து, மலைக்காட்டு மண்ணில், கற்களோடுகலந்துகிடந்து மின்னும் மாணிக்கமணிகளைத் திரட்டி வந்தும், வாழ்வாங்கு வாழும் விழுமியோர் பூழியர். காற்றென்.விரையும் குதிரைப்படை யுடைமையால் சே .ெ ண டு ம் நாட்டினுள்ளும் புகுந்து அந்நாட்டு ஆனிரைச்செல்வங்களைக் கவர்ந்துவந்தும், தம் வாழிடத்து வழிகளைக், க - ந் து .ெ ச ல் லு ம் செல்வர்களை

13

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/23&oldid=1293645" இலிருந்து மீள்விக்கப்பட்டது