பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி நடுங்குவராயினர். இவ்வுண்மையை அறிந்து கொண்டான் பல்யானைக் செல்கெழுகுட்டுவன்; அவன்பால், அரண் வாயிற்கதவுகளைத், தம்கோடுகளால் பிளந்து பாழாக்க வல்ல களிற்றுப் படையும், அரண்மதில்களைத் தம்கல்கால்கவண் பொறியால் பொடியாக்கவல்ல படையும் இருந்தவ மையால், அகப்பா அரணை அழிக்கத் துணிந்தான்்; துணிந்தான்ுக்கு அவ்விருபடைகளும் துணைநின்றன; அகப்பா அழிந்தது; வானக சூடி வீறுகொண்டான் வேந்தன். புலவர்கள் பின்வரும் வாழ்த்துரையினை வழங்கினர்கள்.

துஞ்சுமரம் துவன்றிய மலரகன் பறந்தலை, ஓங்குநிலை வாயில், தூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி, கடிமிளை, குண்டு கிடங்கின், நெடுமதில், நிரைப் பதணத்து அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ!’

-பதிற்றுப்பத்து : 22: 21-27

தமிழகத்துப் ேய ர ர ச ர் க ளா கி ய சேர, சோழ, பாண்டியர்கள் ஒற்றுமையோடிருந்து ஊராண்டவரல்லர்; ஒரு குடியில், பெருவீரன்ஒருவன் பிறந்துவிட்டால், அவன், பிறஇருகுடிப் பேரரசர்களையும் வென்றழிக்க விரும்புவதும், அவ்விருகுடியிலும் வந்தவர்கள், பிறகுறுநிலத்தவர் துணை பெற்று, அப்பெருவீரனை அழிக்க முனைவதும் அக்காலத்தமிழகத்தின் அரசியல் நிகழ்ச்சிகளாம். அதற்கு ஒப்ப, சேரர்குடியில், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் செங்கோல் ஏந்தியதும், சோழனும், பாண்டியனும் தம்பகை ஒழிந்து ஒன்றுபட்டனர்; தம் ஆட்சிக்கு அடிபணிந்தும் அடிபணியாதும் ஆங்காங்கு இருந்து அரசாண்டுவந்த குறுநில மன்னர்களாம்

15

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/25&oldid=1293647" இலிருந்து மீள்விக்கப்பட்டது