பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற் பண்பு

பல்யானைச்செல்கெழுகுட்டுவன் பெருமைகளைப் பாராட்ட, பெரும்புலவர் பாலைக்கெளதமஞர் பாடிய பாடல்களே, பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்தின், பாக்கள் பத்தும். அப்பாக்கள், பல்யானைச்செல்கெழுகுட்டுவனின் வரலாற்றினை விளங்க உரைப்பதோடு, பூழியர், கொங்கர்போலும் பண்டைத் தமிழ்குடிகளின் இயல்புகளையும், அயிரை போலும் அழகிய மலைகளின் மாண்புகளையும், அகப்பா போலும் அக்கால அரண்களின் அ ைம ப் பு முறைகளையும் இனிது எடுத்து இயம்புகின்றன.

மணமாகா இளமகளிர், மனையகத்தே வறிதேகிடந்து வம்பு மொழி பேசி வாழ்நாட்களை விளுட்கள் ஆக்கிவிடாது, பொழுது புலர்ந்ததும், நிறைய மலர்ந்து மணக்கும் குவளைமலர்களையும், அன்றலர்ந்த ஆம்பல் மலர்களையும், இடையிடைவைத்து அழகுறத்தொடுத்த தழையாடை உடுத்து, அடர்ந்துநீண்ட தம்கூந்தலைச் சுருள்சுருளாக ஒப்பனை செய்து, மலர்க்கண்ணி களே மாண்புறச்சூடி, நெற்கதிர் முற்றித் தலைசாய்ந்து கிடக்கும் வயல்களுக்கு ஓடி, ஆங்குப், பாணர் முதலாம் இசைவாணர்க்கு இனியஉறையுளாம் மணல்மேட்டில் வானுற வளர்ந்து நிற்கும் மருதமரத்துக் கிளைகளில் ஏறி அமர்ந்து, வயல்களில் வந்துபடியும் புள்ளினங்களை ஒட்டும் கருத்தின. ராய்க் குரல் எடுத்துக் கூவும், தம் குரலினிமைக்கு மகிழ்ந்து, அணித்தாக உள்ள மலர்ச்சோலை மயில்கள், தம்தோகை விரித்து ஆடக்கண்டு அகம்மிக மகிழ்வர்.

வயல்களுக்குவளம் குறையாமை வேண்டி, வானம் வழங்கிய காலத்தில் தண்ணீரைத் தேக்கிவைத்திடும் பெரிய

20

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/30&oldid=1293653" இலிருந்து மீள்விக்கப்பட்டது