பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகம்

  இமைய வரம்பன் தம்பி, அமைவர்
   உம்பற்காட்டைத் தன்கோல் நிறீஇ,
   அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
   மதிஉறழ் மரபின் முதியரைத் தழீஇக்,
   கண்ணகண் வைப்பின் மண்வகுத்து ஈத்துக்,
   கருங்களிற்று யானைப் புணர்நிரை நீட்டி
   இருகடல் நீரும் ஒருபகல் ஆடி,
   அயிரை பரைஇ, ஆற்றல்சால் முன்பொடு
   ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி
   நெடும்பாரதாயனார் முந்துறக் காடுபோந்த
   பால்யானைச் செல்கெழுகுட்டுவனைப்

பாலைக்கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், அடுநெய் ஆவுதி, கயிறுகுறு முகவை, ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி, கான் உணங்கு கடுநெறி, காடுறுகடு நெறி தொடர்ந்த குவளை, உருத்துவருமலிர்நிறை, வெண்கை மகளிர், புகன்ற ஆயம், இவை பாட்டின் பதிகம்.

     பாடிக்பெற்ற பரிசில், 'நீர் வேண்டியது கொண்மின்’

என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும், என பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெருவேள்வி வேட்பிக்க. பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பினியையும் காணாராயினார்.

    இமயவரம்பன் தம்பி, பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

இருபத்தை யாண்டு வீற்றிருந்தான்.

                                26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/36&oldid=1501738" இலிருந்து மீள்விக்கப்பட்டது