பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அடுநெய் ஆவுதி

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் ெய ரு ைம ய றி ந் து பாராட்டும் கழிபெரும் காதலோடு சேரநாடு சென்ற புலவர் பாலைக் கெளதமனர், சேரநாட்டு எல்லையை அணுகுவதற்கு முன்னரே, அந்நாட்டகத்தே எழுந்து, வானவீதியில் படர்ந்துதிரியும் புகைமண்டிலம், அவரை வருகவருக என வரவேற்றது. பல்யானைச் செல்கெழுகுட்டுவன், ஆற்றலும் ஆண்மையும் அமைவரப் பெற்ற பெரியவீரன் என்பதை அறிந்திருந்தவராதலின், இப்புகை, அவன்பகைவர், அவனவென்று அவன்நாட்டில் எரியூட்ட எழுந்தாதல் இயலாது என்பதை அறிவார் என்ருலும், இப்புகைக்காரணம் யாது என்பதை அறியமாட்டாமையால், அது அறிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியால், அவர் க ல் க ள் தாமாகவே விரைந்து அடியிட்டன.

சேரநாட்டின் எல்லைக்கண், அந்நாட்டிற்கு உரிமை யுடையதான் காட்டுநாட்டில் நுழைந்தார் புலவர். ஆங்குக், கொன்று உயிர்வாழும் கொடு விலங்குகள் வாழ்வதற்கு மாருக, வேள்வி செய்து வையகத்தை வாழ்விக்கும் செந்தண்மை பூண்ட அந்தணர் பெருமக்களே வாழ்வதைக் கண்டார், 'அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’’ என்பது வள்ளுவர் வகுத்த வழி. அரசனின் அறவழி ஆட்சிக்கு அளவுகோலாய் அமைவன இரண்டனுள், தலையாயதும் முதலாயதுமாகிய அந்தணர் ஒழுக்கத்திற்கு உறைவிடமாய் விளங்கும், அக்காட்டுநாட்டின் நலம்கண்டே, பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் செங்கோற்சிறப்பினை உணர்ந்துகொண்ட புலவர், அக்காடுறையும்

27

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/37&oldid=1293661" இலிருந்து மீள்விக்கப்பட்டது