பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தணப்பெருமக்களையும், அவர்தம் வாழ்முறைகளையும் உற்றுநோக்கினர். சொல்லிலக்கிணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐம்பெரும் நூல்களை ஐயந்திரிபு அறக்கற்றுத் தெளிந்த அறிவுடையவர். அவ்வுணர். வுடைமையால் உண்மைத்தவமாவது, உற்றநோய் பொறுத்தலும், உயிர்க்கு ஊறுசெய்யாமையும் அல்லது தவவொழுக்க. மெனத் தனியே வேறு இல்லை என உணர்ந்து, பிற உயிர்க்கு, அவை எத்துணைக் கொடுமையுடையவேனும், சிறுதீங்கும் சிந்தையிலும் எண்ணிஅறியா ஒழுக்கநெறியுடைமையால், உலகத்து உயிர்களெல்லாம் இருகை கூப்பித்தொழும் பெருநிலை வாய்க்கப் பெற்றவர். காலைப் போதில் தோன்றிக் கனயிருள் போக்கும் ஞாயிறு, கடமையில் தவருக் கவின்உடைமையால், அனைத்துலகத்தவராலும் போற்றி வணங்கப் பெறும் வான்புகழ் அடைதல்போல், வாய்மை வழுவா விழுமிய அறம்உடைமையால் உயர்ந்த புகழ் உடையவர். இத்தகு பெரும்பண்புகளின் நிலைக்களமாய்க் காட்சி அளிப்பதால், அவரைக் காண்பவர் எவரும், அச்சம் கலந்த அன்புடையராய் அடங்கி பணிந்து செல்வராயினர். இவ்வியல்பெலாம்கொண்ட உயர்பெரும் உரவோராகிய அவர்கள், முக்த்தீவேட்க, அவர் எடுத்த அத்தீ, அவர் விரும்பியவாறே ஓங்கி எழுவதைக் காணக்கான, அவர் உள் ள ம் இனமறியா ஒர் இன்ப வெள்ளத்தில் ஆழ, அவ்வுணர்ச்சி வயப்பட்ட அவர் உடலும், அவ்வுள்ளுணர்விற்கேற்ற மெய்ப்பாடுடையதாகித் தன்னை மறக்கும் என்பதையும், தவவொழுக்கம் மேற்கொண்ட அத்தக்கோர் மூட்டிய வேள்வித்தீயிலிருந்து எழும் வெண்புகையே, தாம் எல்லைக்கண் கண்ணுற்றது என்பதையும் அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்.

சேரநாட்டின் காட்டகத்தே கடவுளனைய முனிவர்களின் வாழ்க்கை நலம் கண்டபோதே, புலவர் பாலைக்கெளதமர்ை,

28

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/38&oldid=1293663" இலிருந்து மீள்விக்கப்பட்டது