பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச்செல்கெழுகுட்டுவனின் கோல்நலத்தைக் கண்டு கொண்டார். அந்நலம் நினைந்து நெகிழும் நெஞ்சினராய் நாட்டுள் புகுந்த அவரை, ஆங்கெழுந்த பிறிதொருவகைப் புகைமண்டிலம், மேலும் வியப்பிற்குள் ஆழ்த்திவிட்டது. தம் நாடு புகுந்து தம்வீடு நோக்கி வரும் விருந்தினர், தம்மூரில் இருக்கும் வரையும், தம்மனையிலேயே இருந்து உண்பது மட்டும் போதாது; அவர்கள் தம்மனை உணவை வெறுத்தோ அல்லது அளிக்கும் உணவு போதாமையாலோ வேறிடம் செல்லும் விழைவே அவர் உள்ளத்தில் எழுதல் கூடாது. அவர்க்கு அளிக்கும் உணவுவகைகள், அனைத்துமே நல்லன. வாதல் வேண்டும். அதில் ஒன்றைக் கழித்துவிட்டு, ஒன்றை உண்ணும் வகையில், ஒன்று சுவையுடையதாக, ஒன்று சுவையற்றதாதல் கூடாது. அறுசுவையுள் ஒரு சுவையும் குறைபடல் கூடாது என்று எண்ணிஎண்ணி விருந்தளிக்கும் விழுமிய, விரிந்த உள்ளம் வாய்க்கப் பெற்றவராவர் அந் நாட்டுப் பெருமக்கள். அத்தகைய விரிந்த பேருள்ளம் உடைமையால், அவர்கள், ஊனம் எனும் பெயர்பூண்ட இறைச்சிவெட்டும் மனைமீது வைத்து, ஆட்டு வணிகர் நன்குக் கொத்திக்கொடுத்த, வெண்கொழுப்பு மலிந்த கொழுத்த கறியை வேகவைத்துத் தாளிதம் செய்ய, வானளியில் உருக்கிய நெய்யை வார்க்குந்தோறும், கடலொலிபோல் ஒலி எழ, அவ்வக நகர் மனேதொறும் எழும் புகைத்திரள், காட்டில் எழுந்த வேள்வித்தீயின் புகையொடு கலந்து வானத்தில் படரும் காட்சியைக் கண்டு களித்தார் புலவர். காட்டில் வே ள் வி த் தீ எழும்பிய புகை, நாட்டின் நல்லோர் வாழ்க்கையையும், அவர் துணையால் நடைபெறும் நல்லாட்சி யையும்காட்டிற்ருக, நாட்டில் அட்டிற்சாலைக்கண் எழும்புகை, மக்களின் விருந்தோம்பும் மாண்புடைமையினையும் அதற்கு வழி செய்யும் வற்ரு வளப்பெருக்கையும் எ டு த் து க் காட்டுவவாயின.

29

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/39&oldid=1293664" இலிருந்து மீள்விக்கப்பட்டது