பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

25

30

எவ்வம் சூழ்ாது விளங்கிய கொள்கைக், காலை அன்ன சீர்சால் வாய்மொழி, உருகெழுமரபின் கடவுள் பேண்ணியர் கொண்ட தீயின் சுடர் எழுதோறும் விரும்பு மெய்பரந்த பெரும்பெயர் ஆவுதி வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண்மாருது உணி இய, பாசவர் ஊனத்து அழித்த வால்நினக் கொழுங்குறை குய் இடுதோறும் ஆனது ஆர்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி இரண்டுடன் கமழும் நாற்றமொடு, வானத்து நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி ஆர்வளம் பழுநிய ஐயம் தீர் சிறப்பின், மாரிஅம் கள்ளின், போர்வல் யானைப் போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்புச் சிறந்து நன்கலம் தருஉம் மண்படு மார்ப! முல்லைக்கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பிக் கல்உயர் கடத்திடைக் கதிர்மணி பெறுஉம் மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே! குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை! பல்பயம் தழிஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீருடை தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை அயிரைப் பொருந! யாண்டு பிழைப்பு அறியாது பயமழை சுரந்து நோய் இல் மாந்தர்க்கு ஊழியாக, மண்ணுவாயில் மணம் கமழ்கொண்டு

34

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/44&oldid=1293671" இலிருந்து மீள்விக்கப்பட்டது