பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் ஒரீஇயன போல இரவு மலர்நின்று 35 திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்

அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து வேய் உறழ் பணத்தோள் இவளோடு ஆயிரவெள்ளம் வாழிய பலவே!’’

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் துர்க்கு: செந்துக்கு பெயர்: அடுநெய் ஆவுதி

சிறப்பினையும் (1-16) கள்ளினையும், யானையினையும் உடைய மண்படுமார்ப! (17-19) பூழியர் கோவே! மழவர் மெய்ம்மறை! அயிரைப் பொருந! வாழிய பலவே (20-38) என வினை முடிவு கொள்க.

சொல் = .ெ ச ல் லி ல க் க ண ம்; பெயர் - பொருள் இலக்கணம். நாட்டம் = சோதிடம், கேள்வி = வேதம், நெஞ்சம் = ஆகமம். என்ற ஐந்து உடன்போற்றி - என்ற ஐந்து நூல்களையும் ஒரு சேரக்கற்று. அவை துணையாக = அவை கற்றதல்ை உண்டான அறிவு துணையாகப் பெற்ற. எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை = பிற உயிர்களுக்குத் துன்பம் தர நினையாத சிறந்த கொள்கையுடைமையாலும். காலை அன்ன சீர்சால் வாய்மொழி = ஞாயிறு போலத் தப்பாத வாய்மையே வழங்கும் சிறப்பாலும். உருகெழு மரபின் = கண்டார் அஞ்சி அடிபணியத்தக்க இயல்பினை உடையவராகிய, முனிவர்கள் பேணியர் - தாம் வழிபடு கடவுளரைப் பரவுதற்காக, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் - எடுத்த வேள்வித்தீயின் சுடர் ஓங்கி உயருத்தோறும்,

35

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/45&oldid=1293672" இலிருந்து மீள்விக்கப்பட்டது