பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலர் = முல்லைப் பூவாலான கண்ணியும், எண்ணித் தொலையா ஆனிரைகளும் உடையோராகிய ஆயர். புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி = தம் ஆனிரை பலவற்றையும் புல் நிறைந்த மேட்டு நிலத்தில் மேயவிடுத்து. கல் உயர் கடத்திடை = மலைகள் மலிந்த மலைக்காட்டு வழியில். கதிர்மணி பெறுஉம் = ஒளிகாலும் மா னி க் க மணிகளைப் பெறுதற்கு வாய்ப்பளிக்கும். மிதி அல் செருப்பின் = கால் மிதியாகிய செருப்பு அல்லாத, செருப்பு எனும் பெயர் பூண்ட மலையிடை நாடாகிய, பூழியர் கோவே = பூழி நாட்டவரின் கோமகனே! குவியல்கண்ணி = பலவகைப் போர்ப் பூக்களும் ஒரு சேரத்தொடுத்த தலை மாலை அணிந்த மழவர் மெய்ம்மறை = மழவர் என்ற மறக்குலத்தவரைக் கவசம் போன்று காக்கும் காவலனே! பல்பயம் தரீஇய = பல்வேறு பயன்களையும் தன்னகத்தே கொண்டதும். பயங்கெழு நெடுங்கோட்டு = மழைமேகம் தடுத்துப் பயன்படுதல் பொருந்திய நெடிய முடிகளை உடையதும். நீர் அறல் மருங்குவழிப்படா = நீர் ஓடும் பே ா க் கி ற் கு எதிர்த்து ஏறமாட்டாத, பாகுடிப் படா ர் வ ல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா = சேயமைக்கண் இருந்தும் கூர்ந்து நோக்கும் பார்வை பொருந்திய கொக்கின் குத்திற்கு அஞ்சா இயல்புடையதும், (அதாவது, அயிரை என்ற மீனைக் குறிக்காததது என்றவாறு) சீருடை தேஎத்த முனைகெட விளங்கிய = புகழ்மிக்க நாட்டின் எல்லைக்கண் அரணுக அமைந்து பகைவர், போர்முனை புகாவாறு தடுத்துப் போக்கும் புகழ் உடையதுமாகிய, நேர் உயர் நெடுவரை அயிரைப் பொருந = நிமிர்ந்து நிற்கும் நெடிது உ ய ர் ந் த பக்க மலைகளைக் கொண்ட அயிரை மலைக்கு மன்வனே! பயமழை யாண்டு பிழைப்பு அறியாது புரந்து = பயன்தரும் மழை யாண்டின் எப்பகுதியிலும் பொய்த்துப் போகாது பெய்வதால். நோய் இல் மாந்தர்க்கு ஊழியாக = பசியும், பிணியும் அற்ற மக்களுக்கு

37

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/47&oldid=1293674" இலிருந்து மீள்விக்கப்பட்டது