பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்உஊழி காலம் உண்டாகுமாறு. மண்ணுவாயில் மணங்கமிழ் கொண்டு = மண்ணுத போதும் நறுமணமே நாறி, கார்மலர் கமழும் = கார்காலத்தில் மலரும் இயல்புடையதான் முல்லை மணமே மணக்கும், தாழ் இரும் கூந்தல் = நீண்ட கரிய கூந்தலும். ஒரீஇயன போல = தான்்வளரும் பொய்கையை விட்டு வெளிப்பட்டு வந்தது போல். இரவு மலர் நின்று = இராக்காலத்தும் மலர்ந்தே கிடந்து காட்டு தாமரைபோலும். திருமுகத்து அலமரும் = அழகிய முகத்தில் சுழலும். பெருமதர் மழைக்கண் = அகன்ற பெரிய அருள் சுரக்கும் கண்களும். அலங்கிய காந்தன் = காற்ருல் அலைப்புறும் காந்தன் மலர்கள். இலங்குநீர் அழுவத்து = மலர்ந்து விளங்கும் க ா ளு ற் ற ங் க ைர க்க ண் வளர்ந்திருக்கும் காரணத்தால், வேய் உறழ் பணத்தோள் = மென்மையும், தன்மையும் வாய்ந்த மூங்கிலை நிகர்க்கும், பருத்த தோள்களும் உடையளாகிய, இவளோடு = உன் மனைவியோடு, பல ஆயிர வெள்ளம் வாழிய = பல்லாயிரம் வெள்ளம் ஆண்டுகள் வாழ்வாயாக.

வெள்ளம், ஆ யி ர ம் கோடி என்பன போல் ஒரு பேரெண்ணைக் குறிப்பிடும், ஒரு சொல்; அதுபோல், ஆம்பல் என்பதும், அதுபோல் ஒரு பேரெண்ணைக் குறிக்கும்; மற்றொரு சொல். 'வெள்ள வரம்பின் ஊழி’’ (ஐங்குறுநூறு: 281) "ஆம்பல் ஆயிரவெள்ளி ஊழி வாழி' (பதிற்றுப்பத்து : 63 19-21) என்ற வரிகளில் அச்சொல் ஆளப்பட்டிருப்பது 岛町莎矿öG,

38

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/48&oldid=1293675" இலிருந்து மீள்விக்கப்பட்டது