பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கடமையில் கருத்துான்றி நிற்பவர், காம உணர்வினராதல் கூடாது. கடமையும் காமமும், மாறுபட்ட இருவேறு இயல்புடையவாம். ஒன்று நிற்கும் இடத்தில் ஒன்று நிற்காது; நிற்கக் கூடாது. இரண்டையும் ஒருசேர மதித்து நடத்துவது இயலாது. "காமம் விடு ஒன்றே; நாண் விடு; நல்நெஞ்சே! யானே பொறேன். இவ்விரண்டு" என்ற வள்ளுவர் வாக்கை யும் உணர்க. நாடுகாக்கும் கடமைமேற் .கொண்ட அவன், மன்னவன் காமத்தில் ஆழ்ந்துபோன கருத்துடையனாகியவிடின், அவன் நாட்டில் நல்லாட்சி நடைபெறாது. அவனும் மன்னாய் மாண்புறுதல் இயலாது. மனைவிழை. வார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது’ ஆகவே, கடமைநெறி நிற்கவேண்டிய காவலன், அறவே இயலாது என்றாலும், சிறிதே காமம் மறந்த காவலகை வாழ்தல் இன்றியமையாதது.

சுற்றத்தாராகவும், உற்ற நண்பராகவும் தம்மோடு தொடர்பு கொண்டவர்களின், விழைவு வெறுப்புக்களையும் மதித்து நடந்துகொள்ள வேண்டுவது, ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாததே; கண்ணுேட்டம் என்ற அப்பண்பு பொருந்தியிருப்பதினலேயே, உலகியல் ஒழுங்காக நடை பெற்றுவருகிறது.கண்ணுேட்டம் என்னும்கழிபெரும் காரிகை உண்மையால் உண்டு இவ்வுலகு' என்றார் வள்ளுவர். ஆனால், அந்நெறியையே அரசியல் நெறியாகக் கொண்டுவிடின், அதுவே அரசழிவிற்கும் காரணமாகிவிடும்; ஆகவே, அதுவும், ஒர் அளவிற்குட்பட்டதாதலே நன்று. அரசியல் நெறிக்கு அழிவுரா வகையில் அதைக் கடைபிடித்தலே அரசர்க்கு அழகும் ஆக்கமுமாம். "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு" என வள்ளுவர் வகுக்கும் வரம்பினையும் நினைவு கூர்க. ஆகக், காவலன்மாட்டுக் கழிபெரும் கண்ணுேட்டம் அமைத்துவிடுதல் குற்றமாம்.

40

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/50&oldid=1501745" இலிருந்து மீள்விக்கப்பட்டது