பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரன் ஒருமுறையே இறப்பா ன்; கோழை நாழிகைக்கு நாழிகை இ ற ப் ப ா ன் என்றார் ஒரு பெரியார்; அரசன் ஒருவனுக்கு எத்துனைப்பெரிய கோட்டை, பாதுகாப் பளிப்பினும், அவன் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டு விடுமாயின், அக்கோட்டையால் பயன்பெருது, அழிந்தே போவன். அச்சம் உ ைட யார்க் கு அரண் இல்லை'. 'அஞ்சாமை அல்லாது துணை வேண்டா” எனபன, வள்ளுவர் கண்ட வழிமுறைகள். ஆகவே அஞ்சாமை, அரசனுக்குரிய பண்புகளுள் முதலிடம் பெறத்தக்க பெருளுசிறப்புடையதாகும். அஞ்சவேண்டிய பழிபாவம் கண்டும் அஞ்சாமை பேதைமையாவதைப் போலவே, அஞ்சத் தகாத பகைவர்புகுந்த களம் கண்டு அஞ்சுவதும், பேதைமையாம். *

வேந்தன் வாயிலிருந்து .ெ வ ளி ப் ப டு ம் ஒவ்வொரு சொல்லும், உலகத்தவரை வாழ்விக்கும் வான்சிறப்புடைய. அத்தகைய சொற்கள், பொய்யொடு கலந்து பொருளற்றன. வாகிவிடின், அவை உலகை உருக்குலைத்து விடுவதோடு, அவற்றை வழங்கிய வேந்தனையும் வீழ்த்திவிடும். ஆகவே, மறந்தும் பொய்வழங்கா மாண்புடையராதல், மன்னர்க்கு இன்றிய மையததாம்.

அரசன் அன்பை ஆரப்பெற்ருருள் ஒருசிலர், ' இந்நாடாளும் வேந்தன் எம்பால் பெருவிருப்புடையவன்; அவளுல் நன்கு மதிக்கப் பெற்றவர் யாம்; ஆகவே யாம் எது செய்யினும் ஏற்றுக்கொள்வன்' என்று எண்ணி, ஆட்சிக்கு ஊறு விளைக்கும் அறமல்லாதனவற்றையும் ஒரேவழி செய்து விடுவர். அதனல், அரசன் அன்புகாட்டும் நிலையிலும், ஒர் அளவிற்கு உட்பட்டே நிற்றல வேண்டும். ஆக்கம் பெறுதற்காம் அரசியல் உண்மை. களுள் இதுவும் ஒன்றாம்.

4|

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/51&oldid=1293679" இலிருந்து மீள்விக்கப்பட்டது