பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம் பெற்ற அம்முன்னேர், மனையறத்துறையிலும் மாண்புடையராய் விளங்கினர். தம் பண்பும் பெருமையும் கண்டு, தம்பால் பெருங்காதல் கொண்ட பெண்டிரையே. பெருமனைக்கிழத்தியராகப் பெற்றிருந்தனர்; அவர்களை இமைப்பொழுதும் பிரிந்து வாழமாட்டாப் பேரன்பு கொண்டு பழகினர்கள். இவ்வாறு, வாழ்வாங்குவாழ்ந்த அவர்கள், தம்மை நாடி வருவார். பலர்க்கும் பொன்னையும் பொருளேயும், அறுசுவை உணவையும், ஆடை அணிகளையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக், குன்ருப்புகழ் பெற்ருர்கள். இவ்வாறு நாட்டுநிலை, வீட்டுநில ஆகிய இரு பெருநிலைகளிலும், குறை காணு நிறைவாழ்வே கொண்டமையால், அவர் உடல், பிணிகட்கு உள்ளாகிப் பயன் குன்றி மூப்புற்றுவிடவில்லை. நோய்காணு நல்லுடல் பெற்ற அவர்கள், நாள்தோறும் நல்லனவே புரிந்து புரிந்து, பயன்மிகு நெறியிலேயே முதுமை பெய்துவராயினர். இவ்வாறு கல்தோன்றி மண் தோன்ருக்காலந்தொட்டு வரும்முன்னேர் அனைவரும், இத்தகு பயன்மிகு பெருவாழ்வுடையராகவே வாழ்ந்து வந்தமையால், அவர் வ ழி வ ந் த பல்யானைச் செல்கெழுகுட்டுவன்பாலும், அப்பண்புகள் அனைத்தும் பொருந்தியிருக்கக் கண்டு, பேரின்பம் கொண்டார், பாலைக் கெளதமனர்.

குடிப்பெருமையால் குன்ருப் புகழ் படைத்த பல்யானைச் செல்கெழுகுட்டுவன், அம்முன்னேர் ஈ ட் டி ய செல்வமே போதும், அதை உண்டு உயிரோம்புவதோடு தன்கடன் தீர்ந்தது என நினைக்கும் குறுகிய உள்ளம் உடையவன் அல்லன்; அவர்பால் தான்்பெற்ற பெருநிலையைத், தன் உழைப்பால் தான்ும் சிறிது உயர் த் து த ல் வேண்டும், அதுவே குடிப்பிறந்தார் கடனம் என்ற உயர்ந்த உள்ளம் உடையவளுதலின். பற்பல வெற்றிப் புகழ்களை, அப்பேரரசு, அவன் காலத்தும் பெற்றது.

43.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/53&oldid=1293681" இலிருந்து மீள்விக்கப்பட்டது