பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூண்ட பெரிய கோட்டையொன்று இருப்பதைக் கண்டான்; அகப்பா என்ற, அவ்வரண், உண்மையிலேயே சிறந்த காப்பமையப் பெற்றது. அரணகத்து வீரரும், அரணை வளைத்து நிற்கும் பகைநாட்டுப்பெருவீரரும் போரிடற்கேற்ற பரந்து அகன்ற செண்டுவெளி மதிற்புறத்தே, காட்சி அளிக்க, மலையென உயர்ந்த மதிலகத்தே, நெடிய பெரிய வாயிற் கதவுகளை அடைத்துக் கணையமரம் சார்த்தப் பெற்றிருக்கும். வாயில்தோறும், பகைவர் படையைச் சேணெடும் தொலைவில் கண்ணுற்ற போதே, அம்புகளை விரைந்தேவவல்ல ஐய. வித்துலாம் பொறியும் அமைக்கப் பெற்றிருக்கும். இவையே அல்லாமல், மதிலின் ஒவ்வொரு பகுதியிலும், கவணும், கூடையும், தூண்டிலும் துடக்கும், ஆண்டலை அடுப்பும், சென்றெறிசிரலும், நூற்றுவரைக்கொல்லியும் போலும் அரிய பொறிப்படைகள் பல ப் பல பொருத்தப் பெற்றிருக்கும். கண்ணொளி புகாக் காவற்காடு, அடிகாணமாட்டா ஆழம் பொருந்தய அகழி, ஆகியவற்ருல் சூழப்பெற்றிருக்கும். உ2ள என்றும், தலையாட்டம் என்றும் அழைக்கப்பெறும் உறுப்பால், அழகுபெற்ற குதிரைகள், பொன்னரிமாலை அணிந்து, ஒளிவீசு மத்தகத்தால் மாண்புற்ற களிறுகள், வண்ணச் சீலைகளால் வனப்புற்ற, வானளாவும் நெடிய தேர்கள், போர்க்களப் புகழையே விரும்பிப், போர்க்களம்புகத் துடிக்கும் வீரர்கள் ஆகிய நாற்படைகளாலும் நிறைந்திருக்கும்.

அதனல், அக்காலக் கோட்டை எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு அவ்வகப்பாக் கோட்டைக்கு இருப்பதை உணர்ந்தான்் பல்யானைச் செல்கெழுகுட்டுவன். பற்றற் கரியது என்ற பாராட்டினைப் பெற்று விளங்கும் அவ்வரணப் பற்றி அழிப்பதே தன் பேராண்மைக்கு அழகாம் எனக் கருதினன். அதல்ை, அவ்வகப்பா அரண் நோக்கி, சேர. நாட்டவரின் சிறந்த நாற்படைகளையும் நடத்திச் சென்று,

45

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/55&oldid=1293686" இலிருந்து மீள்விக்கப்பட்டது