பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழாக்காலத்து ஆரவாரத்தால் மக்கள் திரளை வாவா என வரவேற்கும் அப்பேரூர்களில் மக்கள் வழக்காறே அற்று- விட்டது; இருண்ட காடுகளில் இரவுப்போதுகளில் மட்டுமே ஊளையிட்டு உலாவரும் நரிக்கூட்டம், நல்ல பகற்போதிலும் ஊளையிட்டுத் திரியலாயின. கோட்டான்கள் கூட்டமாகக் கூக்குரல் எழுப்பின; குள்ளநரி, கோட்டான்களின் குரல் ஒலிக்கேற்ப, பேய்கள் கூத்தாடித் திரியலாயின. அத்துணைப் பாழுற்றுப் போயின. அப்பகை நாடுகள். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் படை வன்மை அத்துணைப் பெரிதாம்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் இப்பெருமைகளை- யெல்லாம் கண்டும் கேட்டும் அறிந்து, அவன்பால் பெருமதிப்- புற்ற புலவர் பாலைக் கெளதமனார், அவன் புகழ்பாடும் அழகிய பாவொன்றைப் பாடியருளினார். அப்பாட்டில், கிணற்றில் நீர் கொள்வான்வேண்டிக் கயிற்றில்பிணித்த முகவைகளைக் கிணற்றுள் இட்டுச் சேந்துவார், முகவைகள் கொணரும் நீரைச் சேந்துவதற்கு மாறாக, அக்கிணற்றில் முகத்தற்கு நீர் இல்லாமையாலும், முகக்கும் சிறிய நீரும் இடைவழியில் சிந்திப்போக, முகவை, அம்முகவைகளைப் பிணித்த கயிறு ஆகியவைகளையே சேந்துவராவர் என்றுகூறுமுகத்தான். நீர்பெரு அருமையை நிலைநாட்டும் சிறப்பு 'கயிறு குறுமுகவை' என்ற தொடரின்பால் பொருந்தியிருக்கும் நயம்கண்டு வியந்தவர்கள், அப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராக்கி மகிழ்ந்தார்கள்.

22. 'சினனே, காமம், கழிகண்ணோட்டம்,

   அச்சம் பொய்ச்சொல், அன்பு மிகஉடைமை, 
   தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து 
   அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும்.

5. தீது சேண் இகந்து, ஒன்று மிகப்புரிந்து,

47

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/57&oldid=1411993" இலிருந்து மீள்விக்கப்பட்டது