பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளாமலும். மையில் அறிவினர் செவ்விதின் நடந்து - ஐயம் திரிபு அறக்கற்ற அறிவுடையராய், அறநூல் கூறும் நன்னெறிக்கண் வாழ்த்தும், தம் அமர்துணை பிரியாது தம் காதல் மனைவியரைக் கணப்பொழுதும் பிரியாது. பாத்துஉண்டு = தாம் ஈட்டும் பொருளை வருவார்க்கு வழங்கி எஞ்சியதை உண்டு. முத்த யாக்கையோடு=இந்நல்லற நெறியோடு முதுமையுற்ற உடலோடு. பிணி இன்று கழிய =நோய் அற்ற நல்வாழ்வு எய்துமாறும். ஊழி உய்த்த=ஊழி ஊழி காலமாக நாடாண்ட, உரவோர் உம்பல்= சிறந்தோர் வழியில் வந்த சேரவேந்தே பொன் செய்கணிச்சி=கரும் பொன் ஆகிய இரும்பினல் செய்த கோடாரியால். திண்பிணி உடைத்து=திண்ணிய வன்னிலத்தைப் பிளந்து தோண்டிய. சிரறு சில ஊறிய நீர்வாய்ப் பத்தல்=சிதறுண்டு சிறிது சிறிதாக ஊறிய தண்ணிர் தேங்கும் கிணறுகளில். கயிறு குறு முகவை=நீண்ட கயிறு கட்டி நீர் முகக்கும் சிறு சிறு குடங்களை. மூயின மொய்க்கும் - நீர்வேட்கை மிகுதியால் கூட்டமாக மொய்த்து நிற்கும். ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த=ஆனிரைச் செல்வங்களைக் கொண்ட கொங்கர் களின் நாட்டை வென்று அகப்படுத்திக் கொண்ட வேல்கெழுதான்ை வெருவரு தோன்றல் - வேலேந்திய வீரர்களையுடைமையால் பகைவர்க்கு அச்சம் விளைவிக்கும் பெரியோனே! உளே பொலிந்த மா = தலையாட்ட அணியால் அழகுற்ற குதிரைகள், இழை பொலிந்த களிறு = பொன்னரி மாலை யால் அழகுபெற்ற யானைகள். வம்பு பரந்த தேர் = வண்ணச் சீலைகளால் வனப்புற்ற தேர்கள். அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரோடு=போர் என்றதும் புறப்பட்டு விடும் போர் வேட்கை மிக்க வீரர்கள் என்ற நாற்படைகளோடு, துஞ்சுமரம் - கணைய மரமும். துவன்றிய மலர் அகன் பறந்தலை = போர் வீரர்கள் நிறைந்த பரந்து அகன்ற செண்டு வெளியும். ஒங்கு நிலைவாயில் = உயர்ந்த மாடங்களைக் கொண்ட மதில

50

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/60&oldid=1293691" இலிருந்து மீள்விக்கப்பட்டது