பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்து வாயில்களையும். துங்குபு தகைத்த வில் விசை = தொங்குமாறு கட்டிய விரைந்து அம்பு ஏவும் விற்பொறியும், மாட்டிய விழுச்சீர் ஐயவி=விற்பொறியோடு ஒருசேர மாட்டிய, விழுமிய சிறப்பு வாய்ந்த ஐயவித்துலாம் எனும் பொறியும் , கடிமிளை - காவற்காடும். குண்டுகிடங்கின் = ஆழ்ந்த அகழியும். நெடுமதில் நிரைப் பதனத்து = நெடிய மதில் முழுதும் வரிசைவரிசையாக அமைக்கப் பெற்ற அரிய பொறிப் படைகளும் உடைமையால். அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா = தலைமையும் சிறப்பும் வாய்ந்த உயர்ந்த அகப்பா என்ற அரனே. எறிந்த = அழித்து வென்ற பொன்புனை உழிஞை = பொன்போலும் அகுழபெற்ற உழிஞை மலர்மாலை அணிந்த வெல்போர் குட்டுவ = வெல்லும் போர்க்களமே காணும் குட்டுவனே, போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்கு நரும் = தோல் போர்த்து அடித்து எழுப்பிய பறையொலி கேட்டு வந்து, பெருகிவரும் வெள்ளத்தை அணைகட்டித் தேக்கும் உழவர்களும். நீர்த்தரு பூசலின் = புதுப்புனல் வருங்கால் எடுக்கும் விழா ஆரவாரத்தால். அம்பு அழிக்குநரும் = வில்லும் அம்பு கொண்டு நடாத்தும் விற்பயிற்சியை மறக்குய் வீரர்களும். ஒலித்தலை விழாவின் மலியும் = ஆரவாரக் களியாட்டம் மிக்க பெருவிழாக்களில் ஒன்று திரண்டு மகிழ்தற்கு இடமான. யாணர்நாடு கெழுதண்பனை = புது வருவாய்மிக்க பகைவர் நாட்டின் மருதவளம் சான்ற வயல்கள், சீறினை ஆதலின் = நீ சினங்கொண்டாய் அதல்ை. குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றி = மேற்கே மறைந்து கிழக்கே தோன்றி. பாய் இருள் அகற்றும் = உலகில் பரவிக்கிடக்கும் பேரிருளைப் போக்கும். பயம் கெழு பண்பின் = பயன் மிக்க பண்பாட்டினை உடைய ஞாயிறு கோடா நன்பகல் அமைத்து = ஞாயிருனவன் கிழக்கிலோ, மேற்கிலோ சாயாமல் தலைக்கு மேலே நேரே நிற்கும் நடுப்பகற்காலத்திலும்.;கவலை:வெண்நரி கூமுறை பயிற்றி = பசியால் வருந்தும் குறுநரிகள் ஒருசேரக்

51

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/61&oldid=1293692" இலிருந்து மீள்விக்கப்பட்டது