பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலும் புதுப்புது வளங்களை இழக்காமல் பெற்ற, பரந்த பெரிய நாடு அந்நாடு.

அந்நாட்டின் இப்பெருவளத்தைப் பண்டு பார்த்து மகிழ்ந்த புலவர், அந்நாடு, பல்லாற்றுனும் பாழுற்றுக் கிடக்கும், இன்றைய நிலையையும் காணநேர்ந்தது. வாணிகம் முதலாம் பல்வேறு வளம் கருதி வருவோரும் பேவோருமாகிய வெளிநாட்டு மக்களால் மண்டிக்கிடக்கும் அந்நாட்டுப் பெருவழிகளில், இன்று வழங்குவார் ஒருவருல் இலராகவே, புல்லும், முள்ளும், முளைத்துச் சிற்றிடமும் வெற்றிடம் காணுதபடி மூடிக் கவின் இ ழ ந் து காட்சி அளித்தன. வானளாவ உயர்ந்த எழுநிலை மாடங்கள் மலிந்து, அம்மாடங்களில் வாழ்ந்த மனையறம் ஒப்பும் மாண்புமிகு மகளிர், தம்காதற்கணவரோடு களித்து உலாவிய அந்நாட்டுப் பேருமன்றங்ளெல்லாம், காளைகளோடு கூடிய காட்டுப் பசுக்கள் திரிதற்கேற்ப, பெருமரக் காடாகி விட்டன.

அக்கொடுங்காட்சிகளைக் கண்டு கலங்கிக் கண்ணிர் சொரிந்த புலவர், பண்டு அத்துணைப் பெருவளம் பெற்றுத் திகழ்ந்த அப்பெருநாடு, இவ்வாறு பாழுற்றுப் போனமைக். காம் காரணம் யாதோ என அறியமாட்டாது அலைந்தார்; அந்நிலையில் ஆங்கு வந்தார் சிலரை அது குறித்து உசாவினர். அவர்கள் 'புலவரேறே! பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பேராற்றலையும் பெரும் புகழையும் அறியமாட்டாது, இந்நாடாளும் வேந்தன், அவளுேடு வைத்துக்கொண்ட அறியாம்ையின் விளைவு இது. அவன் படைப்பெருமை அறியாது, அவன் நாற்படையை எதிர்த்து நின்ற இந்நாட்டு அரசன், அறியாமையால் பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் படையும் புகுந்து விட்டது. நாடு பாழுற்றுப்போய் விட்டது” என்று கூறக்கேட்ட புலவர், அந்நாட்டிடன் அழிவு குறித்து

54

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/64&oldid=1293694" இலிருந்து மீள்விக்கப்பட்டது