பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருபால் ஆருத்துயர் கொண்ட அதேநிலையில், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பேராற்றலை ஒருபால் வியந்து பாராட்டியும் மகிழ்ந்தார்.

அவ்வெண்ணச் சூழலால் சிறிது நாழிகை ஆங்கிருந்து விட்டுச் சேரநாடு நோக்கிய தம் செ ல வி இன மீண்டும் தொடர்ந்தார். புலவர் சென்ற காலம், கொடிய கோடையால் நாடும் காடும் வறண்டுபோன காலமாகும். உன்னமரங்கள், தம் சின்னம் சிறு இலைகளும் உதிர்ந்துபோக மொட்டையாக நின்று காட்சி அளித்தன. கிளிமுதலால் பறையினம் இருந்து ஒலிக்கவேண்டிய அதன் சிறுகிளைகளில் சில்வீடு மட்டுமே குடிவாழ்ந்து, கேட்போர் காதுகடுக்க ஒ ய து ஒலித்துக் கொண்டிருந்தது. இவ்வாறு நாடு வறண்டுபோனமையால், வயல்களும் வளம் இழந்து கிடந்தன. அதனுல் மக்களும் தம் வயிருர உண்பதை விடுத்துச், சிறிது சிறிதே உண்டு காலம் கழித்து வந்தனர். மழை பெருது வறண்ட காலத்தின் விளைவாம் இக்கொடுமைகளைக் கண்ணுற்றவாறே புலவர், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பேருர்களுள் புகுந்தார்.

தலைநகரின் தலைவாயில் வழியாக உள்புகுந்த புலவரை, அப்பேருர்ப் பொதுவிடத்தில் எழுந்த இசையொலி ஆங்கு ஈர்த்தது; அதுகேட்டு ஆங்கடைந்த புலவர், நடுவூர்மன்றத்தே பாணர், பொருநர். கூத்தர் முதலாம் பாடிப்பிழைக்கும் இரவலர்கள் பெருங்கூட்டமாய் வாழ்வதையும், அவர்கள், நாடு வறுமையால் வாடும் அப்போதும் பசியறியாப் பெரு வாழ்வும், தண்ணுெளி வீசும் பொன்னணி பூணும் பெரு வளமும் உடையராய் வாழ்வதையும் கண்டார். அவர்க்கு இத்துணைப் பெருவாழ்வு, இந்நிலையில் வாய்த்த விதம் எவ்வாருே என எண்ணி வியந்து நிற்கும்போது, அவர்கள் இசைக்கருவிகளை அடைத்து வைத்திருக்கும் பைகளை

55

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/65&oldid=1293695" இலிருந்து மீள்விக்கப்பட்டது