பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறை வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்தூக்கு பெயர்: ததைந்த காஞ்சி

குட்டுவ! (1-10), நின்புகழ் அறியார் மலைந்த வேந்தர் ஒராலின், அவர் அகன்தலை நாடு (15-75), அழிந்த ஆற்ற வாய் காடாயின (11-15); வருவேம் கண்டனம் (11).

அலந்தலை உன்னத்து = இலை உதிர்ந்த தலையினையுடைய உன்ன மரத்தின். அங்கவடு பொருந்தி = சிறுசிறு கிளைகளில் பொருந்தியிருந்தது. சிதடிகரைய = சில்வீடு எனும் வண்டுகள் ஒலிக்குமாறு. பெருவறம் கூர்ந்து = கொடிய வற்கடம் மிகுதலால். நிலம் பைதற்ற = நிலம் பசுமையற்ற, புலம் கெடுகாலையும் - வயல்கள் உலர்ந்து வளம் கெட்ட காலத்திலும். வாங்குபு தகைத்த கலப்பையர் = தொகுத்துக் கட்டிய இசைக் கருவிகளைக் கொண்ட பைகளை உடையவராய். மன்றம் போந்து = ஊர்ப் பொதுவிடத்தை அடைந்து. ஆங்கு மறுகு சிறைபாடும் வயிரிய மாக்கள் = அப்பேரூரில் வீதிகளில் புகுந்து, மனைமுன்றில்தோறும் நின்றுபாடும் பாணரும் கூத்தரும் ஆகிய பரிசிலர்களின். கடும்பசி நீங்க = கொடிய பசியானது அறவே நீங்குமாறும். பொன்செய் புனை இழை ஒலிப்ப= பொன்ற்ை செய்த அழகிய அணிகலன்கள் ஆரவாரம் செய்யுமாறும். பெரிது உவந்து - பெருமகிழ்ச்சி கொண்டு. நெஞ்சுமலி உவகையர்= உள்ளம் நிறைந்த உவகை உடைராகி. உண்டு மலிந்து ஆட = மேலும் மேலும் உண்டு, மனச்செருக்குற்று ம கி ழ் ந் து ஆடுமாறும். சிறுமகிழானும்=வளம் அருங்கிய காலத்திலும். பெருங்கலம் வீசும் = அரியபெரிய அணிகலன்களை வாரி வாரிக் கொடுக்கும், போர் அடுதான் = போர் வெல்லும்

58

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/68&oldid=1293698" இலிருந்து மீள்விக்கப்பட்டது